மாத்தளை காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்


மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் கலாபூஷணம் சைவத்திரு.சுப்பிரமணியம் புண்ணியசீலன் பெருமகனாரின் நெறிப்படுத்தலில், தமது திருக்கோயிலின் பெருந்திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்துவருவதனை வழக்காகக் கொண்டுள்ளனர். இதன்பயனாகத் திருவிழாவில்(27-02-2020) இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சைவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் “சைவசமயம் என்னும் அபிராமிசமயம் நன்றே” என்னும் கருப்பொருளில், சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றியிருந்தார்கள். இலங்கை சைவநெறிக் கழகத்தின் காப்பாளர் விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்கள், பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் ஆகியோருடன் ஆலயத்திருவிழாவில் கலந்துகொண்டு அன்னை முத்துமாரியம்மன் அருளினைப் பணியும்பேறும் இச்சொற்பொழிவுப் பயணத்தால்…
மொரட்டுவை-இரத்மலானை(சொய்சாப்புர) அறிவொளி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவிற்கு (2020-02-02) முதன்மை விருந்தினராக இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழாவில், அறநெறிக் கல்வியின் தேவையை நம்சமூகம் நன்கு உணர்ந்தில்லை என்னும் கருப்பொருளில் முதன்மை உரையை ஆற்றினார். comments
சிவராத்திரித் திருநாளில் 07-03-2016 ஆம் நாள் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமைப் பணியகத்தில் மாமன்ற விடுதி மாணவரிடத்தே சைவசமய விழிப்புணர்வுக் கருத்தரங்கு கழகத் தலைவர் சைவத்திரு.கி.பிரதாபன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கேள்வி பதில்களாகச் சைவசமய விழுமியங்கள் மாணவரிடம் பரிமாறப்பட்டது.சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களும் ஏனைய கழக உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன், மாமன்றப் பொதுச்செயலாளர் திரு.தில்லை நடராசா அவர்களும், மாமன்ற உபதலைவர் விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்களும் தலைமை வகித்தனர். comments
05 – 08 – 2013ஆம் நாளன்று மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமித் திருக்கோயிலின் ஆடி அமாவாசைப் பெருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ககள் என்பவற்றில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நல்லூர் திருக்கோயில் முதலிய பல்வேறு சைவாலயங்களில் துண்டுப்பிரசுரம் கொடுக்கும் திருப்பணி முன்னெடுக்கப்பட்டது. சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும் வகையில்…
கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு (01-03-2022) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது. comments
26 – 06 – 2020ஆம் நாளன்று மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறி கழகத்தினால், ஹேகிட்டிய வத்தளை முருகன் திருக்கோயிலில் மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையினையும் திருவாசக முற்றோதலும் ஒழுங்கமைக்கப்பட்டது. இந்நிகழ்வினை சமயப்பிரிவுக்குப் பொறுப்பான இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் திருமதி உதயகௌரி அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது. . comments