Similar Posts
சமயதீக்கை வழங்கும் சிவப்பணி -2019
இலங்கை சைவநெறிக் கழகமும் திருவாவடுதுறை ஆதீனத்தின் கொழும்பு சைவசித்தாந்த பயிற்சி மையமும் இணைந்து, பொதுச்சைவராய் விளங்கும் சைவசமயத்தாருக்கு “சைவ சமய தீக்கை” வழங்கும்அருள்நிகழ்ச்சி 01-09-2019ஆம் நன்னாளில் பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோயில் (வஜீராப் பிள்ளையார் கோயில்) வளாகத்தில் சிவத்திரு.சிதம்பரநாதக்குருக்களைக் கொண்டுவித்து நடத்தப்பெற்றது. இந்நிகழ்வில் 25 பேர் சமயதீட்சை பெற்றுக்கொண்டதுடன், இரு கத்தோலிக்கர்களும் சைவசமய தீக்கையெடுத்து, சைவசமயத்தினைச் சாரும் நற்பேற்றினை உடையவராயினர். …
புத்தளம் பெரியசந்திக்கிராம ஐயனார் ஆலயத்திற்கு பஞ்சலோக சிவலிங்கமூர்த்தம் வழங்கல்
புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமத்திலுள்ள ஐயனார் ஆலயத்தில் சிவராத்திரி முதலிய வழிபாடுகளுக்கு சிவமூர்த்தம் இன்மையைச் சுட்டிக்காட்டி, அருகில் சிவவழிபாட்டுக்குரிய கோயில்கள் இன்மையையும் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்திடம் “சிவலிங்கம்” பெற்றுத்தருமாறு வேண்டுதற்கடிதம் ஊர்மக்களின் சார்பில் கோயில் நிர்வாகசபையினரால் அளிக்கப்பட்டிருந்தது. இக்கிராமம், இசுலாமிய மதத்தினரின் ஊர்களால் சூழப்பட்ட பகுதியில் இருக்கும் அடிப்படை வசதிகள் நலிந்த பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையிலுள்ள சைவத்தமிழ்க் கிராமம் என்பதனால், இக்கிராம மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கை சைவநெறிக் கழகத்தால் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டு, அகில இலங்கை…
கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத்தில் துண்டுப்பிரசுரங்கள் கையளித்தல் 2014
கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத் திருக்கோயிலுக்கு ஒருதொகைத் துண்டுப்பிரசுரம் கையளித்தல் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) உறுப்பினர் மருத்துவர் ஆசைப்பிள்ளை சயூரதன் அவர்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சுவரத்தில் திருக்கோயிலுக்கு வரும் அடியாருக்குக் கையளிப்பதற்காகக் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் 21-10-2014ஆம் திகதியன்று ஒருதொகைத் துண்டுப்பிரசுரங்களைக் கோயிற் தொண்டரிடம் வழங்கி வைத்தார். comments
சிவராத்திரித் திருநாளில் சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப்பணி 2016
சிவராத்திரித் திருநாளினை முன்னிட்டு 07-03-2016 ஆம் நாள் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களின் தலைமையில் கொழும்பில் உள்ள சைவாலயங்களில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டன. comments
சைவநெறி என்னும் இலங்கைப் பாடத்திட்டப் பெயரை ஒழிக்கலாமோ?
இலங்கைப் பாடத்திட்டத்தில் சைவநெறி என்று இருக்கும் சைவசமயப் பாடத்திட்ட நூலின் பெயரை இந்துசமயம் என்று மாற்றவேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கல்விக்குழுத் தலைவராக இருக்கும் திரு.த.மனோகரன் என்பார் கட்டுரை எழுதித் தினக்குரலில் வெளியிட்டார். சுமார்த்தமத இந்துத்துவத் தரகர்களுடன் இணைந்து இயங்குவதினாலும் சைவசமயத்திற்கும் சுமார்த்தமதத்திற்கும் உரிய வேறுபாடுகளை உரியமுறையிற் தெளிந்துகொள்ளாமையினாலும், சைவசமயம் / சைவநெறி என்னும் சொற்பதங்களின்பால் காழ்ப்புணர்வுடன் இயங்கும் இந்நபர், பல்வேறு கருத்துக்களையும் திரித்து; போலிக்கருத்துக்களையெல்லாம் இட்டுக்கட்டி குறித்த கட்டுரையை எழுதியிருந்தார். அப்போது இலங்கை…
நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019
2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும் சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…






