Similar Posts
மட்டக்களப்பில் நடைபெற்ற இருநூல் அறிமுகவிழா
அண்மையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீட்டில் வெளிவந்திருந்த, ஆய்வாளர் வி.துலாஞ்சனன் அவர்களின் “அலகிலா ஆடல் – சைவத்தின் கதை” மற்றும் திருமுறைச்செல்வர் ந. சிவபாலகணேசன் அவர்களின் “சிவப்பிரகாச கதவம்” ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 29-12-2018 அன்று மட்டக்களப்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமாகிய திரு.மா. உதயகுமார் பிரதம விருந்தினரான கலந்து கொண்ட இந்நிகழ்வில் அருள்விருந்தினராக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் குருக்கள் சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்கள் அவர்களும், சிறப்பு…
இலங்கை கண்ட “முதலாவது” சைவம் போற்றுதும் 2018
இலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் “சைவம் போற்றுதும்- 2018” என்கின்ற விழாவினை முதன்முதலில் 07ம் நாள் ஏப்பிரல் மாதம் 2018 அன்று, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அரங்கேற்றினர். இவ்விழாவிற்கு முதன்மை அனுசரணையை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகையினரும், துணை அனுசரணையை சைவநெறித் தொண்டர் கழகம்-கனடா, சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை -டென்மார்க்,லிட்டில் ஏசியா எம்போரிய ஆடையகத்தினர் வழங்கியிருந்தனர்….
காஞ்சி சங்கராசாரிய சுமார்த்தமதத்தாரிடம் சைவசமய அந்தணர் பயிற்சி பெறுவதா? தடுத்து நிறுத்தும் சிவப்பணி!
இந்துத்துவ சுமார்த்தமத தரகர்களின் சூழ்ச்சியினால் இலங்கைப் பிரதமர் திரு.இரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்பில் இலங்கை சைவாலயப் பூசகப்பிராமணர் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் சைவாலய சிவாகமப் பூசைப்பயிற்சிக்கு அனுப்பிவைக்கும் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகச் செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இதனை இலங்கையில் உள்ள இந்துகுருமார் அமைப்புக்கள் சிலவும் வரவேற்று அறிக்கைகள் வெளியிட்டன. தமிழ்நாட்டில் காஞ்சி சங்கரமடம் சிவாகமப்பாடசாலை ஒருசில சிவாசாரியரைக் கொண்டு நடத்திவருகின்றனர். இப்பாடசாலையிலேயே இவ்வாறு இலங்கை சைவாலய அந்தணர் இலங்கை அரசால் இந்துசமய கலாசார அமைச்சினூடாக சேர்க்கும்…
சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்குக் கழகத்தின் நிதியுதவி
தாண்டியடி,திருக்கோவில் பிரதேசத்தைச் சார்ந்த சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத் திருப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் ரூபா 10,000 நன்கொடை (10-01-2019) வழங்கப்பட்டது. இவ்வாலயச் சூழலுள் பிறமதத்தாரின் ஆக்கிரமிப்புக்களும் பாதுகாப்புப் படையினரின் தலையீடுகளும் இருந்துவருவதால், இவ்வாலயத்தினைப் பலப்படுத்தவேண்டியது தமிழருக்கு இப்பூமி பூர்வீக உரித்துடையதென்பதை பலப்படுத்தும் வரலாற்றுப் பணியென்பதை இலங்கை சைவநெறிக் கழகம் நன்குணர்ந்து, அவர்களின் ஆலயக் கட்டுமானப்பணிகளுக்கு இந்நிதியுதவி மேற்கொள்ளப்பட்டிருந்தது. comments
பத்திரிக்கைகளில் யாழ்ப்பாண இருநூல் வெளியீட்டு விழா
யாழ்ப்பாணம் இணுவிலில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் நடத்தப்பட்ட இருநூல் வெளியீட்டு விழா குறித்த செய்தி விழா நாளில் (21-09- 2019) வலம்புரி நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், வீரகேசரிப் பத்திரிக்கையில்(13-10-2019) விழா நிழற்படங்கள் தகவல்களோடு வெளியாகியிருந்தது. சிவபூமி சஞ்சிகையிலும் விழா நிகழ்ச்சி குறித்த செய்தி ஆவணமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. comments
சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுரப் பணி 2022
கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு (01-03-2022) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது. comments






