சைவநெறி என்னும் இலங்கைப் பாடத்திட்டப் பெயரை ஒழிக்கலாமோ?

இலங்கைப் பாடத்திட்டத்தில் சைவநெறி என்று இருக்கும் சைவசமயப் பாடத்திட்ட நூலின் பெயரை இந்துசமயம் என்று மாற்றவேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கல்விக்குழுத் தலைவராக இருக்கும் திரு.த.மனோகரன் என்பார் கட்டுரை எழுதித் தினக்குரலில் வெளியிட்டார். சுமார்த்தமத இந்துத்துவத் தரகர்களுடன் இணைந்து இயங்குவதினாலும் சைவசமயத்திற்கும் சுமார்த்தமதத்திற்கும் உரிய வேறுபாடுகளை உரியமுறையிற் தெளிந்துகொள்ளாமையினாலும், சைவசமயம் / சைவநெறி என்னும் சொற்பதங்களின்பால் காழ்ப்புணர்வுடன் இயங்கும் இந்நபர், பல்வேறு கருத்துக்களையும் திரித்து; போலிக்கருத்துக்களையெல்லாம் இட்டுக்கட்டி குறித்த கட்டுரையை எழுதியிருந்தார். அப்போது இலங்கை சைவநெறிக் கழகத்தின் ( சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின்) பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் குறித்த கட்டுரையைக் கண்டித்தும் நிராகரித்தும் உண்மைகளைச் சைவப்பெருமக்கள் தெளிந்து சைவசமயம் என்று உணர்ந்து உயரவேண்டும் என்னும் நோக்கில் மறுப்புக் கட்டுரையைத் தினக்குரல் பத்திரிக்கைக்கு 17 – 02 – 2017ஆம் நாள் திகதியிட்டு எழுதி வழங்கினார். தினக்குரல் பத்திரிக்கை நிர்வாகம் திரு.வி.துலாஞ்சனன் அவர்களின் கட்டுரையின் பெறுமதியை உணர்ந்து தமது ஞாயிறு பதிப்பில் (19-02- 2017) உடனடியாக வெளியிட்டு உதவினர். இலங்கையில் சைவசமயம் என்னுஞ் சொற்பதத்தினை ஒழிக்கும் செயற்திட்டத்தினைக் கண்டும் காணாது பாரம்பரிய அமைப்புக்கள் எல்லாம் விளங்கும்போதும், இலங்கை சைவநெறிக் கழகம் (சைவ சமூகத் திருப்பணிக் கழகம்) இவ்விசயத்தில் ஒருபோதும் சமரசம் இன்றிப் பணியாற்றும் பாங்கினை விடைக்கொடிச்செல்வர் சைவத்திரு.சின்னத்துரை தனபாலா பெருமகனார் தனிப்பட்டரீதியிலும் அகில இலங்கை இந்து மாமன்றப் பேரவைக் கூட்டத்திலும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

comments

Similar Posts

  • |

    கொழும்பு விவேகானந்த சபையிற் கழகத் தலைவரின் சொற்பொழிவு

    கொழும்பு விவேகானந்த சபையில் சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளின்பொருட்டு (27-01-2019) ஏற்பாடு செய்யப்பட்ட விவேகானந்தர் விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். “ஞானத்தினை நோக்கி நகர்ந்த சுவாமி விவேகானந்தர் கண்ட சைவசித்தாந்த தரிசனம்” என்னும் தலைப்பிற் கழகத்தின் தலைவர் அவர்கள் சொற்பொழிவாற்றினார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றிச் சாதித்ததற்குக் காரணம், அமெரிக்காவினர் ஆபிரகாமிய மதங்களைத் தவிர வேறொன்றினையும் அறிந்திராமையேயாகும். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காச் சொற்பொழிவுகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியபோது, முதலில் வந்தது இலங்கைக்கேயாகும்….

  • |

    சமயதீக்கை வழங்கும் சிவப்பணி -2019

    இலங்கை சைவநெறிக் கழகமும் திருவாவடுதுறை ஆதீனத்தின் கொழும்பு சைவசித்தாந்த பயிற்சி மையமும் இணைந்து, பொதுச்சைவராய் விளங்கும் சைவசமயத்தாருக்கு “சைவ சமய தீக்கை” வழங்கும்அருள்நிகழ்ச்சி 01-09-2019ஆம் நன்னாளில்  பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோயில் (வஜீராப் பிள்ளையார் கோயில்) வளாகத்தில் சிவத்திரு.சிதம்பரநாதக்குருக்களைக் கொண்டுவித்து நடத்தப்பெற்றது. இந்நிகழ்வில் 25 பேர் சமயதீட்சை பெற்றுக்கொண்டதுடன், இரு கத்தோலிக்கர்களும் சைவசமய தீக்கையெடுத்து, சைவசமயத்தினைச் சாரும் நற்பேற்றினை உடையவராயினர்.                        …

  • |

    ஐயம் தெளிதல் – 2019

    சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட  கேள்விகளுக்கு விடையளித்தார்.      

  • | |

    புத்தளம் பெரியசந்திக்கிராம ஐயனார் ஆலயத்திற்கு பஞ்சலோக சிவலிங்கமூர்த்தம் வழங்கல்

    புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமத்திலுள்ள ஐயனார் ஆலயத்தில் சிவராத்திரி முதலிய வழிபாடுகளுக்கு சிவமூர்த்தம் இன்மையைச் சுட்டிக்காட்டி, அருகில் சிவவழிபாட்டுக்குரிய கோயில்கள் இன்மையையும் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்திடம் “சிவலிங்கம்” பெற்றுத்தருமாறு வேண்டுதற்கடிதம் ஊர்மக்களின் சார்பில் கோயில் நிர்வாகசபையினரால் அளிக்கப்பட்டிருந்தது. இக்கிராமம், இசுலாமிய மதத்தினரின் ஊர்களால் சூழப்பட்ட பகுதியில் இருக்கும் அடிப்படை வசதிகள் நலிந்த பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையிலுள்ள சைவத்தமிழ்க் கிராமம் என்பதனால்,  இக்கிராம மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கை சைவநெறிக் கழகத்தால் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டு, அகில இலங்கை…

  • | |

    யாழ்ப்பாணத்தில் சைவசமய, சிவ தீக்கை வழங்கும் சிவப்பணி 2021

    இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத் தீக்கைகளினையும் , சிவஸ்ரீ சிவ.கமல்ராஜ்குருக்கள் சிவாசாரியரினைக் கொண்டுவித்து, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி சிங்காரவேலவன் சிவகாயத்திரி சந்நிதானத்தில் வழங்கும் சிவப்பணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் சைவஞானபானு ஆறுதிருமுருகனார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்ந்தியிருந்தார். comments

  • | |

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2017

    அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், சைவ சமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 30 -07- 2017ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது.                 comments