சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரன் பெருமகனார் சிவபதப்பேறுக் கடிதம்
சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரனார் சிவபதம் பெற்றதும் அவருடைய சிவபதப்பேறுக்கு திருவருளை விண்ணப்பித்தும், அவர் வையக வாழ்வை நீத்தமையினால் பிரிவுத்துயரில் விளங்கும் அவருடைய உறவினர் மாணாக்கர் சைவாபிமானியர் யாவருடனும் அன்புபாராட்டும் வகையிலும் இலங்கை சைவநெறிக் கழகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையோடு இணைந்து, சிவபதப்பேறுக் கடிதம் சமூக ஊடகங்களில் வெளியிட்டு, இலங்கைச் சைவப்பெருமக்களின் நன்றியுணர்வையும் சேக்கிழார் அடிப்பொடிப் பெருமகனார்பால் இலங்கைச் சைவப்பெருமக்கள் கொண்டுள்ள பற்றையும் தெரிவித்துக்கொள்ளக்கூடியதாகவிருந்தது.