| |

நாவலர் விழா 2022

நாவலர்பெருமானின் 200ஆவது ஆண்டு உதித்த நன்னாளினைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தால் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விண்ணப்பத்திற்கு ஏற்ப, நாவலர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுப் பல்வேறு நிகழ்ச்சிகள் நாவலர்பெருமானைச் சிறப்பிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் அங்கமாக, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் ஏற்பாட்டில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, இலங்கைச் சைவநெறிக் கழகம் அடங்கலாகப் பல்வேறு சைவ அமைப்புக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, நாவலர்பெருமான் குருபூசையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 31ஆம் நாள் (31- 12 – 2022) சனிக்கிழமை காலையில் கொழும்பு சம்மாங்கோட்டுப் பிள்ளையார் திருக்கோயிலில் இருந்து ஊர்வலத்துடன் தொடங்கி, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடனும் சைவசமயப் பொது அறிவுத் தேர்வுப்போட்டிகளுடனும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத்துறையின் மூத்தவிரிவுரையாளர் சைவத்திரு.தி.செல்வமனோகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். முதன்மை விருந்தினராக உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு சி.துரைராஜா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

comments

Similar Posts

  • |

    ஐயம் தெளிதல் – 2019

    சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட  கேள்விகளுக்கு விடையளித்தார்.      

  • | |

    வடகொழும்பு இந்து மாமன்றத்தின் சிவராத்திரி நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு

    வடகொழும்பு இந்து மாமன்றம் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் 2020ஆம் ஆண்டு மகாசிவராத்திரித்திருநாளில் ” சைவசமயத்தில் குரு,இலிங்க,சங்கம வழிபாடு” என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். comments

  • |

    கொழும்பு விவேகானந்த சபையிற் கழகத் தலைவரின் சொற்பொழிவு

    கொழும்பு விவேகானந்த சபையில் சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளின்பொருட்டு (27-01-2019) ஏற்பாடு செய்யப்பட்ட விவேகானந்தர் விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். “ஞானத்தினை நோக்கி நகர்ந்த சுவாமி விவேகானந்தர் கண்ட சைவசித்தாந்த தரிசனம்” என்னும் தலைப்பிற் கழகத்தின் தலைவர் அவர்கள் சொற்பொழிவாற்றினார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றிச் சாதித்ததற்குக் காரணம், அமெரிக்காவினர் ஆபிரகாமிய மதங்களைத் தவிர வேறொன்றினையும் அறிந்திராமையேயாகும். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காச் சொற்பொழிவுகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியபோது, முதலில் வந்தது இலங்கைக்கேயாகும்….

  • |

    கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத்தில் துண்டுப்பிரசுரங்கள் கையளித்தல் 2014

    கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத் திருக்கோயிலுக்கு ஒருதொகைத் துண்டுப்பிரசுரம் கையளித்தல் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) உறுப்பினர் மருத்துவர் ஆசைப்பிள்ளை சயூரதன் அவர்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சுவரத்தில்  திருக்கோயிலுக்கு வரும் அடியாருக்குக் கையளிப்பதற்காகக் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் 21-10-2014ஆம் திகதியன்று ஒருதொகைத் துண்டுப்பிரசுரங்களைக் கோயிற் தொண்டரிடம் வழங்கி வைத்தார். comments

  • | | |

    இடபக் கொடிக்கு ஏற்பட இருந்த இடரைத் தடுக்கும் பணியில் கழகம்!!!

    இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் கொழும்புக்கிளையினால் ”ஸ்ரீ குருபூஜா விழா” என்னும் பெயரில் 11-08 – 2013 நாளன்று விழாவொன்று,  விவேகானந்த சபை மண்டபத்தில்  விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த  இவ்விழாவில், இலங்கையில் சைவசமயத்தினரின் அடையாளமாக விளங்கும் சமயக்கொடியாகிய இடபக்கொடிக்குப் பதிலாக, தனித்த காவிக்கொடியினையே சைவசமயத்தாரும் ஏற்றொழுகுதல் வேண்டும் என்னும் செயற்திட்டத்தினை திணிக்கும் வகையில் ”காவிக்கொடி” அறிமுகஞ் செய்துவைத்து இலங்கையின் இந்துக்கொடியாக காவிக்கொடியினை பிரகடனஞ் செய்துவைக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. இடபக்கொடியினை அறிமுகஞ்செய்துவைத்து தமது சொந்த செலவில்…

  • | | |

    மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு-2023

    இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் சைவசித்தாந்தக் கருத்தரங்கு என்னும் தொனிப்பொருளில்,  மே, ஜூன்,ஜூலை,செம்டெம்பர்,அக்டோபர்,நவம்பர் மாதங்களில் சைவசித்தாந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. திருவருட்பயன் கொடிக்கவி என்பவற்றின் சிந்தனையுரைகளைக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும், உண்மை விளக்கம் சிந்தனையுரையை சித்தாந்தரத்தினம், சைவப்புலவர் மரு.கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்களும்,  விஞ்ஞானப்பார்வையில் சைவசித்தாந்தம் என்னும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கருத்தரங்குகளை நடத்தினர். 14- 05- 2023ஆம் நாள் இக்கருத்தரங்கு  சித்தாந்தரத்தினம், சைவசித்தாந்தமுதுகலைமாணி, சிவத்திரு. ந. சிவபாலகணேசன் பெருமகனார் முன்னிலையில் தொடங்கப்பட்டது.  அனைத்துக் கருத்தரங்குகளிலும் சித்தாந்தரத்தினம் சைவசித்தாந்தமுதுகலைமாணி சிவத்திரு.  ந.சிவபாலகணேசன் பெருமகனார் கலந்துகொண்டு வாழ்த்தி வழிநடத்தினார்.முதலாவது நிகழ்ச்சியில் இலங்கைச் சைவநெறிக் கழகக் காப்பாளர்களான சைவத்திரு.விடைகொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா பெருமகனாரும், சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனாரும் கலந்துசிறப்பித்து வாழ்த்தினர். 14- 05 – 2023ஆம் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கு     செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட சைவசித்தாந்தக் கருத்தரங்கின்போது, சித்தாந்தசரபம் சிவத்திரு.ஆ.ஆனந்தராசன் பெருமகனார் சிவனடிப்பேறு…