| | |

திருமந்திர ஆன்மீக மாநாடு 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறையினரும் அகில இலங்கை சைவ மகாசபையினரும் இணைந்து திருமந்திர ஆன்மீக மாநாடு 2023 என்னும் தலைப்பில், 28 -10- 2023ஆம் நாளன்று திருமந்திர மாநாடு மிகச்சிறப்பாக நடத்தியிருந்தனர். இம்மாநாட்டில் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் பதில் தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையின் அதிபர் சைவத்திருமதி சிவசோபனா வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்,  கழகத் தலைவரின் சிற்றுரையும் இடம் பெற்றது.

 

 

 

comments

Similar Posts

  • | |

    சைவம் பேணுவாம் 2022-சிவகீதை நூல் அறிமுகவிழாவும் சிவநெறி அரங்கும்

    தமிழ்நாட்டில் சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சிவகீதை நூலினை இலங்கையில் அறிமுகம் செய்துவைக்கும் விழாவாகவும், சைவ விழிப்புணர்ச்சிச் சொற்பொழிவுகள் அடங்கிய சிவநெறி அரங்கு விழாவாகவும் சைவம் பேணுவோம் விழா, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 20 – 12 – 2022ஆம் நாளன்று இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டது.  சைவசமயத்திலும் கீதை என்னும் நூல் உண்டு என்பது குறித்த விழிப்புணர்வையும், ஏராளமான கீதைகள் உள்ளன என்பதனையும் சைவத்தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும் என்பதன்பொருட்டுத்…

  • | | |

    2018ஆம் ஆண்டு சைவம் போற்றுதும் விழாவில் சைவம் போற்றுதும் நூல் வெளியீடு

    சைவநெறிக் கற்போடு தத்துவத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தோடு இணைத்திடும் திருவிழாவாக, முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட “சைவம் போற்றுதும்” விழாவின்போது (04 – 07 – 2018) விழாவினைச் சிறப்பிக்குமாறு, “சைவம் போற்றுதும்” நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனை சிவத்திரு.கு.வை.க.வைத்தீசுவரக்குருக்கள் வெளியிட்டுவைக்க, முதற்பிரதியினை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகை அதிபர் திரு.திருமதி.அ.பி.ஜெயராஜா தம்பதியர் பெற்றுக்கொண்டனர். சைவசமயம்,சைவசமயத்தில் வழிபடு கடவுள், சைவ சமய நூல்கள், விடைக்கொடி என்னும் தலைப்புக்களில் கட்டுரைகளுடன், சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் வரலாறுகளையும், கழகத்தினால் சைவம்போற்றுதும் விழாவிற் விருதுவழங்கப்பட்ட சைவச்சான்றோர் பற்றிய சிறுகுறிப்புக்களையும்…

  • | |

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 – 11 –  2021ஆம் நாளன்று  மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக் கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது. comments

  • |

    நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

    2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும்  சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும்  ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…

  • |

    அம்பாறை வளத்தாப்பிட்டியில் சமயதீக்கை வழங்குதல்

    2022 – 03 – 17ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடன் இணைந்து இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தின் பங்களிப்புடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சைவசமயதீக்கை வழங்கும் கிரியைகளினைச் சிவாகமவிதிப்படிச் சிறப்புடனே ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் 124 பேர் சைவசமயதீக்கை பெற்றுக்கொண்டனர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இல்லங்களில் சிவபூசை செய்வது எவ்வாறென்று விளங்கிய அச்சுப்பிரதி நூல்களும் இந்துசமய கலாசார…

  • |

    ஐயம் தெளிதல் – 2019

    சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட  கேள்விகளுக்கு விடையளித்தார்.