Similar Posts
பத்திரிக்கைகளில் சைவம் போற்றுதும் 2018
ஞாயிறு வீரகேசரிப் பத்திரிக்கை இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்ட ”சைவம் போற்றுதும்” நிகழ்ச்சி குறித்த செய்தியை மிகவும் சிறப்பாக வெளியிட்டிருந்தனர். ஞாயிறு வீரகேசரி முதன்மை ஆசிரியர் திரு.பிரபாகன் அவர்கள் மக்களிடம் இவ்விழா குறித்த செய்தி சென்றடையவேண்டும் என்று கொண்டிருந்த கரிசனையின் வெளிப்பாட்டை சைவம் போற்றுதும் குறித்த செய்தியினை வெளியிட்டு வைத்துள்ள விதம் உணர்த்தியுள்ளது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் நன்றி அப்பெருமகனாருக்கு என்றும் உரித்தாகுக. சைவம் போற்றுதும் விழாவில் இடம்பெற்ற ஒருசில நிகழ்ச்சிகளை வீரகேசரி நிருபர் செய்தியாக வெளியிட்டிருந்தார். comments
தமிழ்நாட்டின் பேரூர் ஆதீனம் ஏற்பாடு செய்த நாவலர் பெருமான் குருபூசை நிகழ்வு
தமிழ்நாட்டில் உள்ள வீரசைவ மரபினைச் சேர்ந்த பேரூர் ஆதீனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட தவத்திரு ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசையினை முன்னிட்டான இணையவழி நிகழ்வு 07 – 12 – 2020 ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணையவழியினூடாக இணைந்து கொண்டு, கழகத் தலைவர் அவர்கள் நாவலர்பெருமான் பற்றிய சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தார். comments
நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019
2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும் சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…
கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014
அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால், கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…
சுவாமி விவேகானந்தர் சபை-அறநெறிப் பாடசாலையில் சைவ விழிப்புணர்ச்சி வகுப்பு 2019
கொழும்பு சுவாமி விவேகானந்தர் சபையில் நடைபெறும் அறநெறி வகுப்புக்கு பயணம்செய்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களும், பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் செல்வி.செ.உதயகௌரி அவர்களும் ஏனைய கழக உறுப்பினர்களும் இணைந்து, அறநெறி வகுப்பிற் கல்விகற்கும் மாணவர்க்கு சமய விழிப்புணர்ச்சி வகுப்புகள் (20-01-2019) எடுத்தனர். …
மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்
மன்னார்-திருக்கேதீச்சுவரத்தில் அமைந்துள்ள மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினால் 11-07- 2019ம் நாள் நடத்தப்பட்ட சைவவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சிவத்திரு.மரு.திரு.கி.பிரதாபன் ஈசான தேசிகர் அவர்கள், சைவநெறி சாருதல் தவப்பயனின் விளைவு என்னும் கருப்பொருளில் சிறப்புரையும் ஆற்றினார்கள். சைவசமயத்தார் ஆபிரமாகிய மதங்களின் போலிப்பிரச்சாரங்களுக்குள்ளும் அழுத்தங்களுக்கும் உள்ளாகி மதம் மாறுவதற்கு, இந்துவென்ற பெயரில் சைவசமயத்தாரிடம் ஊடுருவி நிற்கும் ”அனைத்தும் ஒன்றுதான்” என்னும் உளவியல் உறுதியின்மையே காரணம் என்றும், ”அனைத்தும் ஒன்றுதான் என்று சிவபெருமானும் சனைச்சரனும்…





