அலகிலா ஆடல்- சைவத்தின் கதை நூல் விமர்சனக் கட்டுரை


கொரணை புரோசேஸ்டர் கோவின்ன தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு(14-04-2018) ஆகமசார் ஆலோசனைகளை வழங்குவதற்கு கொழும்பிலிருந்து சிவாச்சாரியார் சகிதம் சென்று, அவ்வூர் மக்களின் ஆலயபரிபாலனம் தொடர்பான ஆகம ஐயங்களை நீக்கி இலங்கை சைவநெறிக் கழகத்தாற் வழிகாட்டப்பட்டது. comments
அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், இலங்கை சைவநெறிக் கழகம் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 31 -07- 2018ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது. comments
நவராத்திரியின்பொருட்டு மாணவரின் ஆக்கத்திறன்களை முன்கொண்டுவரும் முகமாக ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட போட்டிகள் மற்றும் விழாவுக்குத் தேவையான நிதிப்பலத்தினை உருவாக்கும்பொருட்டு,கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை கல்லூரிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தால் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. comments
நல்லை ஆதீன இரண்டாம் குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தப் பரமாச்சாரிய சுவாமிகளுடைய திருவருள் ஆணைக்கு அமைவாக, 2018ம் ஆண்டு நடைபெற்ற (07 – 04 – 2018) சைவம் போற்றுதும் விழாவில், இலங்கை சைவநெறிக் கழகத்தால் சிவபூமிச் சைவமுதலிகள், சிவபூமிச் சைவத்தேசிகர், சிவபூமிச் சைவத் தாதையர் பிரகடனம் அரங்கேற்றப்பட்டது. சிவபூமிச் சைவமுதலிகளாக 1)ஶ்ரீலஶ்ரீ ஞானப்பிரகாசசுவாமிகள், 2)ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானார், 3)ஶ்ரீலஶ்ரீ காசிவாசி செந்திநாத ஐயர் பெருமானார், 4)ஶ்ரீலஶ்ரீ மாயவாததும்சகோளரி கதிரைவேற்பிள்ளை பெருமானார் ஆகியோரும், சைவத்தேசிகர்களாக 1)சைவப்பெரியார் திருவிளங்கம் தேசிகர் பெருமானார்,…
அண்மையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீட்டில் வெளிவந்திருந்த, ஆய்வாளர் வி.துலாஞ்சனன் அவர்களின் “அலகிலா ஆடல் – சைவத்தின் கதை” மற்றும் திருமுறைச்செல்வர் ந. சிவபாலகணேசன் அவர்களின் “சிவப்பிரகாச கதவம்” ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 29-12-2018 அன்று மட்டக்களப்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமாகிய திரு.மா. உதயகுமார் பிரதம விருந்தினரான கலந்து கொண்ட இந்நிகழ்வில் அருள்விருந்தினராக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் குருக்கள் சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்கள் அவர்களும், சிறப்பு…
சித்திரை- ஆனி 2019 தென்றல் சஞ்சிகையில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட, இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளரால் எழுதப்பட்ட ”அலகிலா ஆடல்-சைவத்தின் கதை” நூல் அறிமுகம் வெளியிடப்பட்டிருந்தது. அலகிலா ஆடல் சைவத்தின் கதை நூலினையும் சிவப்பிரகாசக் கதவம் நூலினையும் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளமுடியும். comments