மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்

மன்னார்-திருக்கேதீச்சுவரத்தில் அமைந்துள்ள மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினால் 11-07- 2019ம் நாள் நடத்தப்பட்ட சைவவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சிவத்திரு.மரு.திரு.கி.பிரதாபன் ஈசான  தேசிகர் அவர்கள், சைவநெறி சாருதல் தவப்பயனின் விளைவு என்னும் கருப்பொருளில் சிறப்புரையும் ஆற்றினார்கள்.  அத்துடன், இலங்கை சைவநெறிக் கழகத்தின் காப்பாளராக விளங்கும் திரு.கண்ணப்பனார் அவர்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தின் சார்பில் மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினருக்கு வழங்கிய 20,000 ரூபாயினை கையளித்தார்கள்.

preload imagepreload image