மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி – கழகத் தலைவரின் கட்டுரை
அருள்மிகு மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் பற்றி கழகத் தலைவரால் எழுதப்பட்ட சிறப்புக்கட்டுரை, வீரகேசரிப் பத்திரிக்கையில் வெளியாகியது.

அருள்மிகு மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் பற்றி கழகத் தலைவரால் எழுதப்பட்ட சிறப்புக்கட்டுரை, வீரகேசரிப் பத்திரிக்கையில் வெளியாகியது.

அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால், கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…
இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத் தீக்கைகளினையும் , சிவஸ்ரீ சிவ.கமல்ராஜ்குருக்கள் சிவாசாரியரினைக் கொண்டுவித்து, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி சிங்காரவேலவன் சிவகாயத்திரி சந்நிதானத்தில் வழங்கும் சிவப்பணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் சைவஞானபானு ஆறுதிருமுருகனார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்ந்தியிருந்தார். comments
அருள்மிகு மாணிக்கவாசகப் பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 13- 07 – 2021ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது. அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது. comments
சிவராத்திரித் திருநாளினை முன்னிட்டு 07-03-2016 ஆம் நாள் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களின் தலைமையில் கொழும்பில் உள்ள சைவாலயங்களில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டன. comments
தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை ஆதரவுடன் சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் இணையவழியில் நடத்திய ”உலகளாவிய மார்கழிப் பெருவிழா 2021- 2022 ” நிகழ்வில் 27 – 12 – 2021 ஆம் நாள், இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் ”கபிலதேவ நாயனார்,பரண தேவ நாயனார், இளம்பெருமான் அடிகள் ஆகியோர் படைப்புகளில் கடவுட் கொள்கையும் வரலாறும்” என்னும் தலைப்பில் இணையவழியாக கருத்துரையாற்றினார்கள். comments
இலங்கைச் சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கைச் சைவநெறித் தொண்டர் கழகமும் இணைந்து ஏற்பாடுசெய்த அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும், வத்தளையில் ஹேகிட்டிய அருள்மிகு சிவசுப்பிரமணியப்பெருமான் திருக்கோயிலில் 23 – 06 – 2026ஆம் நாள் இனிதே நடைபெற்றது. comments