| |

நாவலர்பெருமான் குருபூசை -2023

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் இலங்கை சைவநெறிக் கழகம்,ஈழத்து திருநெறித் தமிழ் மன்றம், இந்து வித்தியா விருத்தி சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம்,  இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து  நாவலர்பெருமான் குருபூசை 04 – 12 – 2023ஆம் நாள் கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. பாடசாலை மாணவர், சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர் முதலியோரின் பங்களிப்புடன் இக்குருபூசை இனிதே நடைபெற்றது. இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவரும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டில் கலந்து சிறப்பித்தனர்.

comments

Similar Posts

  • | |

    சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013

    05 – 08 – 2013ஆம் நாளன்று  மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமித் திருக்கோயிலின் ஆடி அமாவாசைப் பெருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.   தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ககள் என்பவற்றில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நல்லூர் திருக்கோயில் முதலிய பல்வேறு சைவாலயங்களில் துண்டுப்பிரசுரம் கொடுக்கும் திருப்பணி முன்னெடுக்கப்பட்டது. சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும் வகையில்…

  • |

    ஐயம் தெளிதல் – 2019

    சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட  கேள்விகளுக்கு விடையளித்தார்.      

  • |

    சொய்சாப்புரத்தில் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை தொடக்கவிழா

    சொய்சாப்புரத்தில் இயங்கிவந்த சைவசமயத்தாருக்குரிய அறநெறிப் பாடசாலை செயலிழந்துபோனமையினால், புதிதாகவொரு அறநெறிப் பாடசாலை தோற்றுவித்து உதவும்படி இலங்கைச் சைவநெறிக் கழகத்தாருக்கு பெற்றோர் பலரும் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக,  இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை என்னும் பெயரில்,  20 – 08 – 2023ஆம் நன்னாளில்,  இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் நேரடி நிர்வாகத்தில் சைவசமய அறநெறிப் பாடசாலையைத் தோற்றுவிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சியானது,  ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சொய்சாப்புரம் டி சொய்சா நவோதயா பாடசாலை மண்டபத்தில், சைவத்திருமதி பரமேஸ்வரி கதிர்காமநாதன்…

  • | |

    நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில் சமயதீக்கையும் சிவவழிபாட்டுப் பயிற்சியும்

    மலையகத்தில் நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில்  நவநாதச்சித்தர் பெருமானின் சமாதி விளங்கும் சிவாலயத்தில், 29ம் திகதி ஜூலை மாதம் 2023 நாளன்று காலை 8.00 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை 415 பேருக்கு சைவசமயதீக்கை வழங்கும் சிவப்பணி இனிதே நடைபெற்றது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில், இலங்கை சைவநெறிக் கழகத்தின் நெறிப்படுத்தலில், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை இந்து மாமன்றம், சைவ முன்னேற்றச் சங்கம்- பிரித்தானியா, ஆத்மஜோதி முத்தையாசுவாமிகள் சைவசமயத் தொண்டர் சபை, கனடா சைவநெறித் தொண்டர் கழகம்,இலங்கை சைவநெறித் தொண்டர் கழகம் என்பவற்றின் இணை அனுசரணையோடு, சமயதீக்கை வழங்கும் சிவப்பணி நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் சிவாகமபீடத்தின் சிவாச்சாரியப்பெருமகனார், சிவஸ்ரீ. கிருஷ்ண ஜனேந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவஸ்ரீ ந.வர்ணதேவக்குருக்கள் (அச்சுவேலி- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.நா.சிவதர்ஷக்குருக்கள் (நல்லூர்- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.கிருஷ்ண ஹரிகரன் ஐயர் (சிவாகம பீடம்- நல்லூர்) ஆகியோர் கலந்துகொண்டு கலந்துகொண்டு சமயதீக்கை கிரியைகளினை சிறப்புற சிவாகமவிதிப்படி நிகழ்த்தியருளினர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு சைவசமய அனுட்டானப்புத்தகமும் பஞ்சபாத்திரம்…

  • | | |

    களுத்துறை மண்ணில் நவராத்திரி விழா விவாத அரங்கு 2023

    களுத்துறை அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குரிய நவராத்திரி விழாவுக்குரிய விவாத நிகழ்ச்சிக்குரிய பயிற்சி இலங்கைச் சைவநெறிக் கழகத்தினால் வழங்கப்பட்டதுடன்,  இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபன் அவர்களால் 20  – 10 – 2023ஆம் நடைபெற்ற குறித்த விவாத நிகழ்ச்சி நடுவர் பொறுப்பில் இருந்து நெறிப்படுத்தப்பட்டது. திருக்கோயில் நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் கலைநிகழ்ச்சிக்கு , இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சைவத்திரு.ய.அநிருத்தனன் அவர்கள் முதன்மை விருந்தினராகவும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின்…

  • | |

    சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுரப் பணி 2022

    கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு (01-03-2022) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.                               comments