சொய்சாப்புரத்தில் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை தொடக்கவிழா
சொய்சாப்புரத்தில் இயங்கிவந்த சைவசமயத்தாருக்குரிய அறநெறிப் பாடசாலை செயலிழந்துபோனமையினால், புதிதாகவொரு அறநெறிப் பாடசாலை தோற்றுவித்து உதவும்படி இலங்கைச் சைவநெறிக் கழகத்தாருக்கு பெற்றோர் பலரும் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை என்னும் பெயரில், 20 – 08 – 2023ஆம் நன்னாளில், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் நேரடி நிர்வாகத்தில் சைவசமய அறநெறிப் பாடசாலையைத் தோற்றுவிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சியானது, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சொய்சாப்புரம் டி சொய்சா நவோதயா பாடசாலை மண்டபத்தில், சைவத்திருமதி பரமேஸ்வரி கதிர்காமநாதன் அம்மையாரை முதன்மை விருந்தினராகவும், சைவத்திரு. விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா தம்பதியரினைப் பீடுடைவிருந்தினராகவும் கொண்டு, இலங்கைச் சைவநெறிக் கழக வழிகாட்டிப்பெருந்தகை சிவத்திரு.ந.சிவபாலகணேசன் பெருமகனார் முன்னிலையில் இனிதே நடந்தேறியது.
இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் அறிஞர் குழாத்தினராகிய சைவத்திருமதி ஆசிரியமாமணி சசிமா இரவிக்குமார் ஆசிரியை, சைவத்திரு.ஈஸ்வரபாதம் ஹரிகரன் ஆசிரியர் ஆகியோர் அறநெறிப் பாடசாலையின் நிர்வாகத்தை நெறிப்படுத்தும் பொறுப்பேற்று சிறப்புச்செய்தனர். இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் அறிஞர் குழாத்தின் விண்ணபத்திற்கு ஏற்ப, அறநெறியின் அதிபராகச் சைவத்திருமதி சிவசோபனா வினோதரூபன் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் ஓவியர் ஞானகுரு அவர்களைக் கொண்டுவித்து மெய்கண்டப்பெருமான் திருவுருவம் வரையப்பட்டு, இந்நிகழ்ச்சியின்போது திறந்து வைக்கப்பட்டுப் பூசிக்கப்பட்டது.



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)