ரௌரவ ஆகம வித்யா பாதம் – சங்கதமும் தமிழும் தமிழ்நாட்டில் வெளியிடப்படும் திருப்பேறு
திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகளாய் விளங்கி அருளும் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூசை திருநாளான 26-07-2023ஆம் நாள், சுத்தசைவம் நூலாசிரியர் சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனாரால் எழுதப்பட்டதும் இலங்கைச் சைவநெறிக் கழகத்தினாலும் தமிழ்நாடு புனிதர் பேரவையினாலும் இணைந்து பதிப்பிக்கப்பட்டதுமான ‘ரௌரவ ஆகம வித்யா பாதம் – சங்கதமும் தமிழும் ‘ நூலை ஆசீர்வதித்து வெளியிட்டருளினார்.




