சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2017
சிவராத்திரித் திருநாளில் (24-02-2017 )சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் கொழும்பிலுள்ள சைவாலயங்களில் கழகத்தாரால் விநியோகிக்கப்பட்டது.
சிவராத்திரித் திருநாளில் (24-02-2017 )சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் கொழும்பிலுள்ள சைவாலயங்களில் கழகத்தாரால் விநியோகிக்கப்பட்டது.
2022 – 03 – 17ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடன் இணைந்து இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தின் பங்களிப்புடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சைவசமயதீக்கை வழங்கும் கிரியைகளினைச் சிவாகமவிதிப்படிச் சிறப்புடனே ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் 124 பேர் சைவசமயதீக்கை பெற்றுக்கொண்டனர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இல்லங்களில் சிவபூசை செய்வது எவ்வாறென்று விளங்கிய அச்சுப்பிரதி நூல்களும் இந்துசமய கலாசார…
கொழும்பு 13 ஸ்ரீ கதிரேசன் வீதி அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாணத் திருவிழாப் பெருநாளில்(23-05-2022), திருக்கோயிலின் அறங்காவலர் சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனார் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, வழிபட வருகைதந்திருந்த கனடாவாழ் சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் ”சைவமாமணி” விருது வழங்கிப் பாராட்டியது. கனடாவில் இலங்கை சைவமக்களிடையே சைவசமயப் போதனைகளினை நன்றே முன்னெடுத்துவருதல் பொருட்டும், இலங்கையில் அவருடைய சொந்த மண்ணிலும் ஏனைய இடங்களிலும் பல்வேறு சைவசமய அறப்பணிகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்திவருதல் பொருட்டும் இலங்கை சைவநெறிக்…
அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 03- 07 – 2022ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது. அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது.
சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை என்னும் தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 15 – 12 – 2021ம் திகதி தொடக்கம் 20 – 12- 2021ம் திகதி வரை தமிழ்நாட்டு சைவ அறிஞர்களினையும் இணைத்து சிறப்புற ஒழுங்குசெய்யப்பட்டது.
இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத் தீக்கைகளினையும் , சிவஸ்ரீ சிவ.கமல்ராஜ்குருக்கள் சிவாசாரியரினைக் கொண்டுவித்து, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி சிங்காரவேலவன் சிவகாயத்திரி சந்நிதானத்தில் வழங்கும் சிவப்பணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் சைவஞானபானு ஆறுதிருமுருகனார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்ந்தியிருந்தார்.
தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை ஆதரவுடன் சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் இணையவழியில் நடத்திய ”உலகளாவிய மார்கழிப் பெருவிழா 2021- 2022 ” நிகழ்வில் 27 – 12 – 2021 ஆம் நாள், இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் ”கபிலதேவ நாயனார்,பரண தேவ நாயனார், இளம்பெருமான் அடிகள் ஆகியோர் படைப்புகளில் கடவுட் கொள்கையும் வரலாறும்” என்னும் தலைப்பில் இணையவழியாக கருத்துரையாற்றினார்கள்.
மலையகத்தில் சாமிமலைப்பிரதேச பெயார்லோன் தோட்டத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கட்டிடப்பணிக்கு 14,700/= பெறுமதியான 15 மூட்டை சீமெந்து(05-01-2021), சமூகப்பணிப்பொறுப்பாளர்- கழகப்பிரதித்தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களின் நன்கொடையினால் வழங்கப்பட்டது.
அருள்மிகு மாணிக்கவாசகப் பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 13- 07 – 2021ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது. அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது.
கொழும்பு இந்துக் கல்லூரி கற்பக விநாயகர் திருக்கோயிலில் 18 – 11 – 2021ம் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள் திருவிழா, இலங்கை சைவநெறிக் கழகத்தின் நிதி அனுசரணையுடன் சிறப்புற நடைபெற்றது. அத்தோடு வில்வமரம், விளா வேம்பு முதலிய மரங்களும் பாடசாலைச் சூழலில் வளர்க்கும் முகமாக, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் முதலாவது மரநடுகைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.