| | |

சொய்சாப்புர பொங்கல் விழாவில் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் உரை

மொரட்டுவை-இரத்மலானை(சொய்சாப்புர) அறிவொளி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவிற்கு
(2020-02-02) முதன்மை விருந்தினராக இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழாவில், அறநெறிக் கல்வியின் தேவையை நம்சமூகம் நன்கு உணர்ந்தில்லை என்னும் கருப்பொருளில் முதன்மை உரையை ஆற்றினார்.

comments

Similar Posts

  • | |

    2022ம் ஆண்டு நடைபெற்ற அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்

    அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 03- 07 – 2022ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது.  அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது.   comments

  • |

    நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

    2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும்  சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும்  ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…

  • | |

    சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013

    05 – 08 – 2013ஆம் நாளன்று  மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமித் திருக்கோயிலின் ஆடி அமாவாசைப் பெருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.   தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ககள் என்பவற்றில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நல்லூர் திருக்கோயில் முதலிய பல்வேறு சைவாலயங்களில் துண்டுப்பிரசுரம் கொடுக்கும் திருப்பணி முன்னெடுக்கப்பட்டது. சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும் வகையில்…

  • | | |

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014

    அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால்,  கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…

  • | |

    சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் பிரகடனம்

    நல்லை ஆதீன இரண்டாம் குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தப் பரமாச்சாரிய சுவாமிகளுடைய திருவருள் ஆணைக்கு அமைவாக, 2018ம் ஆண்டு நடைபெற்ற (07 – 04 – 2018) சைவம் போற்றுதும் விழாவில், இலங்கை சைவநெறிக் கழகத்தால் சிவபூமிச் சைவமுதலிகள், சிவபூமிச் சைவத்தேசிகர், சிவபூமிச் சைவத் தாதையர் பிரகடனம்  அரங்கேற்றப்பட்டது. சிவபூமிச் சைவமுதலிகளாக 1)ஶ்ரீலஶ்ரீ ஞானப்பிரகாசசுவாமிகள், 2)ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானார், 3)ஶ்ரீலஶ்ரீ காசிவாசி செந்திநாத ஐயர் பெருமானார், 4)ஶ்ரீலஶ்ரீ மாயவாததும்சகோளரி கதிரைவேற்பிள்ளை பெருமானார் ஆகியோரும், சைவத்தேசிகர்களாக 1)சைவப்பெரியார் திருவிளங்கம் தேசிகர் பெருமானார்,…

  • | |

    யாழ்ப்பாணத்தில் சைவசமய, சிவ தீக்கை வழங்கும் சிவப்பணி 2021

    இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத் தீக்கைகளினையும் , சிவஸ்ரீ சிவ.கமல்ராஜ்குருக்கள் சிவாசாரியரினைக் கொண்டுவித்து, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி சிங்காரவேலவன் சிவகாயத்திரி சந்நிதானத்தில் வழங்கும் சிவப்பணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் சைவஞானபானு ஆறுதிருமுருகனார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்ந்தியிருந்தார். comments