| |

வடபகுதி வெள்ளப்பெருக்கில் அல்லலுற்ற மக்களுக்கு கழகத்தின் அன்புக்கரம்

டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழையானது, 22ஆம் திகதி முதல்  கொடும் மழையாகப் பெய்யத்தொடங்கியதனால் இலங்கையின் வடபகுதி பெரும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகி, பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து பல இடங்களில் தஞ்சமடைய வேண்டிய இடர் ஏற்பட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார், வவுனியா,முல்லைத்தீவு ஆகிய தமிழ்ப் பகுதிகளே இவ்வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகிய இடங்களாகும்.


இவ்வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட இடர்காலத்தில், அகில இலங்கை இந்து மாமன்றம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, வடபகுதியில் நேரடியாகப் பயணஞ் செய்து வழங்க ஏற்பாடுகளைச் செய்தனர்.

எனவே, இலங்கை சைவநெறிக் கழகத்தால் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடு இணைந்து, பொருட்கள் பலவும் கொள்வனவு செய்யப்பட்டு, அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  சரசுவதி ம்ண்டபத் தற்காலிக களஞ்சிய சாலையில் (இந்து வித்தியா  விருத்திச் சங்கத்தினுடையது) 26- 12 – 2018ஆம் நாள் கையளிக்கப்பட்டது.


2018 வெள்ளப்பெருக்கின் பாரதூரத்தினை அறிந்து கொள்வதற்கு உதவும் இணையத்தளங்கள்
1) FloodList என்னும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தின் இணைய முகவரி
https://floodlist.com/asia/sri-lanka-floods-december-20182) THE FLOOD PEOPLE என்னும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தின் இணைய முகவரி
https://www.jbarisk.com/knowledge-hub/event-response/flooding-in-sri-lanka-2018/

3) World Food Programme என்னும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை
https://www.wfp.org/publications/2018-sri-lanka-report-flood-impact-north-east-monsoon

4) OCHA (United Nations Office for the Coordination of Humanitarian Affairs) – reliefweb  ஆய்வறிக்கை
https://reliefweb.int/disaster/fl-2018-000425-lka

comments

Similar Posts

  • பத்திரிக்கைகளில் சைவம் போற்றுதும் 2018

    ஞாயிறு வீரகேசரிப் பத்திரிக்கை இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்ட ”சைவம் போற்றுதும்” நிகழ்ச்சி குறித்த செய்தியை மிகவும் சிறப்பாக வெளியிட்டிருந்தனர். ஞாயிறு வீரகேசரி முதன்மை ஆசிரியர் திரு.பிரபாகன் அவர்கள் மக்களிடம் இவ்விழா குறித்த செய்தி சென்றடையவேண்டும் என்று கொண்டிருந்த கரிசனையின் வெளிப்பாட்டை சைவம் போற்றுதும் குறித்த செய்தியினை வெளியிட்டு வைத்துள்ள விதம் உணர்த்தியுள்ளது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் நன்றி அப்பெருமகனாருக்கு என்றும் உரித்தாகுக. சைவம் போற்றுதும் விழாவில் இடம்பெற்ற ஒருசில நிகழ்ச்சிகளை வீரகேசரி நிருபர் செய்தியாக வெளியிட்டிருந்தார். comments

  • | |

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2016

    அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், சைவ சமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 05 -08- 2016ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது. comments

  • | | |

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014

    அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால்,  கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…

  • | |

    இலங்கை கண்ட “முதலாவது” சைவம் போற்றுதும் 2018

    இலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் “சைவம் போற்றுதும்- 2018” என்கின்ற விழாவினை முதன்முதலில் 07ம் நாள் ஏப்பிரல் மாதம் 2018 அன்று, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அரங்கேற்றினர்.  இவ்விழாவிற்கு முதன்மை அனுசரணையை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகையினரும், துணை அனுசரணையை சைவநெறித் தொண்டர் கழகம்-கனடா, சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை -டென்மார்க்,லிட்டில் ஏசியா எம்போரிய ஆடையகத்தினர் வழங்கியிருந்தனர்….

  • |

    இலங்கை சைவநெறிக் கழகத்தின் கோவிட்கால உதவி

    இலங்கை சைவநெறிக் கழகத்தினால் கோவிட் காலப்பகுதியில் புத்தளம் கல்பிட்டி பெரியபள்ளிவாசல்துறையினைச் சேர்ந்த ஐயனார் கோயில் நிர்வாகத்தினூடாக நிதியுதவி அளித்து, வாழ்வாதார உணவுப் பொதி கிராமமக்களுக்கு வழங்கப்பட்டது. மலையகத்தில் தெனியாயப் பிரதேசத்தில் தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தினூடாக நிதியுதவி அளித்து, அத்தியாவசிய உணவுப்பொதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகமும் பங்கேற்றது. comments

  • |

    யாக்கை அறக்கட்டளைக்கு நிதிதிரட்டி வழங்குதல்

    தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகளினை ஆவணப்படுத்தும் தனியார் அறக்கட்டளையான ”யாக்கை தொண்டு அறக்கட்டளை” அமைப்பு வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, புலம்பெயர் தேசத்தில் உள்ள சைவ மக்களிடம் விண்ணபித்துப் பெற்றுக்கொண்ட நிதித்தொகையினை (இந்தியப் பெறுமதி 30,400/=) யாக்கை அறக்கட்டளைக்கு வழங்கி, இலங்கை சைவத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளுக்கு பக்கபலமாக விளங்கும் வரலாற்றுப்பாலத்தினை இலங்கை சைவநெறிக் கழகம் வெளிப்படுத்திக்கொண்டது. comments