| | | |

மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் சொற்பொழிவு 2023

மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் திருவிழாக் காலத்தில் 26-02- 2023 ஆம் நாள்  இலங்கைச் சைவநெறிக்  கழகத் தலைவர்  சிவத்திரு.மரு. ஈசானதேசிகர் கி.பிரதாபன் அவர்கள் சைவத்திரு.புண்ணியசீலன் ஐயா அவர்களின் விண்ணப்பத்தில் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தத் திருவருள் கூடியது.  மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் திருவிழாக் காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுக்கு நேரம் ஒதுக்கி, சைவமக்கள் சொற்பொழிவுகளால் ஆற்றுப்படுத்தும் பெருஞ்சிவதொண்டினைப் பல்லாண்டுகளாகச் சைவத்திரு.புண்ணியசீலன் ஐயா அவர்களின் மேற்பார்வையில் நடத்திவருகின்றனர்.


 

 

 

comments

Similar Posts