| |

நாவலர்பெருமான் குருபூசை -2023

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் இலங்கை சைவநெறிக் கழகம்,ஈழத்து திருநெறித் தமிழ் மன்றம், இந்து வித்தியா விருத்தி சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம்,  இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து  நாவலர்பெருமான் குருபூசை 04 – 12 – 2023ஆம் நாள் கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. பாடசாலை மாணவர், சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர் முதலியோரின் பங்களிப்புடன் இக்குருபூசை இனிதே நடைபெற்றது. இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவரும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டில் கலந்து சிறப்பித்தனர்.

comments

Similar Posts

  • | |

    மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்

    மன்னார்-திருக்கேதீச்சுவரத்தில் அமைந்துள்ள மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினால் 11-07- 2019ம் நாள் நடத்தப்பட்ட சைவவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சிவத்திரு.மரு.திரு.கி.பிரதாபன் ஈசான  தேசிகர் அவர்கள், சைவநெறி சாருதல் தவப்பயனின் விளைவு என்னும் கருப்பொருளில் சிறப்புரையும் ஆற்றினார்கள். சைவசமயத்தார் ஆபிரமாகிய மதங்களின் போலிப்பிரச்சாரங்களுக்குள்ளும் அழுத்தங்களுக்கும் உள்ளாகி மதம் மாறுவதற்கு, இந்துவென்ற பெயரில் சைவசமயத்தாரிடம் ஊடுருவி நிற்கும் ”அனைத்தும் ஒன்றுதான்” என்னும் உளவியல் உறுதியின்மையே காரணம் என்றும், ”அனைத்தும் ஒன்றுதான் என்று சிவபெருமானும் சனைச்சரனும்…

  • |

    அம்பாறை வளத்தாப்பிட்டியில் சமயதீக்கை வழங்குதல்

    2022 – 03 – 17ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடன் இணைந்து இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தின் பங்களிப்புடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சைவசமயதீக்கை வழங்கும் கிரியைகளினைச் சிவாகமவிதிப்படிச் சிறப்புடனே ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் 124 பேர் சைவசமயதீக்கை பெற்றுக்கொண்டனர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இல்லங்களில் சிவபூசை செய்வது எவ்வாறென்று விளங்கிய அச்சுப்பிரதி நூல்களும் இந்துசமய கலாசார…

  • | | | |

    சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்

    சைவப்பெருஞ்சமயத்தில் சுமார்த்தமதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசுத்தங்களினை இனங்கண்டு நீக்கி, சைவப்பெருஞ்சமயத்தினை சுத்தநெறியாகத் தாபிக்கும் திருநூல் என்பதுவே, சுத்தசைவம் நூலின் சிறப்பாகும். தமிழ்நாடு புனிதர் பேரவைச் சைவக்கோமகனார் சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனாரால் எழுதப்பட்ட சுத்தசைவம் நூலினை முழுமையாகப் படித்து இன்புற்ற சைவப்பெரியார் சிவபாலகணேசன் பெருமகனார் அடியேனிடம் ”நூலாசிரியரினை யானைமேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுவருதலே எம் கடனாகும்” என்று உள்ளம் கசிந்துருகக் கூறினார். தம் நூல்கள் முதலிய பல சைவ நூல்களுக்கும் பொருள் விளக்கம் கொள்வதற்கு இந்நூலே உறுதுணை என்பதினை இந்நூலினைப்…

  • |

    காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவு

    தென்னிலங்கையில் காலிமாநகரில் முதன்மைக் காலி வீதியில் விளங்கும் அருள்மிகு மீனாட்சி உடனாய சுந்தரேசுவரப்பெருமான் திருக்கோயிலானது, சைவப்பெருமக்களால் காலிமாநகர் சிவன் கோயில் என்று அறியப்பட்டுவரும் சிறப்புடைய சிவாலயமாகும்.  05 -03 – 2019ஆம் நாள் இரவு சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு இத்திருத்தலத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர், இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் கணக்காளர் திரு.காண்டீபன் அவர்களுடன் பயணம் செய்து,” நம் சிவபெருமான் பெருமைகள்” என்னும் கருப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார். comments

  • | | |

    இடபக் கொடிக்கு ஏற்பட இருந்த இடரைத் தடுக்கும் பணியில் கழகம்!!!

    இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் கொழும்புக்கிளையினால் ”ஸ்ரீ குருபூஜா விழா” என்னும் பெயரில் 11-08 – 2013 நாளன்று விழாவொன்று,  விவேகானந்த சபை மண்டபத்தில்  விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த  இவ்விழாவில், இலங்கையில் சைவசமயத்தினரின் அடையாளமாக விளங்கும் சமயக்கொடியாகிய இடபக்கொடிக்குப் பதிலாக, தனித்த காவிக்கொடியினையே சைவசமயத்தாரும் ஏற்றொழுகுதல் வேண்டும் என்னும் செயற்திட்டத்தினை திணிக்கும் வகையில் ”காவிக்கொடி” அறிமுகஞ் செய்துவைத்து இலங்கையின் இந்துக்கொடியாக காவிக்கொடியினை பிரகடனஞ் செய்துவைக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. இடபக்கொடியினை அறிமுகஞ்செய்துவைத்து தமது சொந்த செலவில்…

  • | | |

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014

    அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால்,  கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…