Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்குக் கழகத்தின் நிதியுதவி
    2019 | சமயப்பணி

    சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்குக் கழகத்தின் நிதியுதவி

    Byilankaisaivism 2020-03-232020-05-07

    தாண்டியடி,திருக்கோவில் பிரதேசத்தைச் சார்ந்த சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத் திருப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் ரூபா 10,000 நன்கொடை  (10-01-2019) வழங்கப்பட்டது. இவ்வாலயச் சூழலுள் பிறமதத்தாரின் ஆக்கிரமிப்புக்களும் பாதுகாப்புப் படையினரின் தலையீடுகளும் இருந்துவருவதால், இவ்வாலயத்தினைப் பலப்படுத்தவேண்டியது தமிழருக்கு இப்பூமி பூர்வீக உரித்துடையதென்பதை பலப்படுத்தும் வரலாற்றுப் பணியென்பதை இலங்கை சைவநெறிக் கழகம் நன்குணர்ந்து, அவர்களின் ஆலயக் கட்டுமானப்பணிகளுக்கு இந்நிதியுதவி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

    Read More சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்குக் கழகத்தின் நிதியுதவிContinue

  • ஐயம் தெளிதல் – 2019
    2019 | சமயப்பணி

    ஐயம் தெளிதல் – 2019

    Byilankaisaivism 2020-03-232025-04-28

    சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட  கேள்விகளுக்கு விடையளித்தார்.      

    Read More ஐயம் தெளிதல் – 2019Continue

  • 2018ஆம் ஆண்டு சைவம் போற்றுதும் விழாவில் சைவம் போற்றுதும் நூல் வெளியீடு
    2018 | கழக வெளியீடுகள் | சமயப்பணி | சைவம் போற்றுதும்

    2018ஆம் ஆண்டு சைவம் போற்றுதும் விழாவில் சைவம் போற்றுதும் நூல் வெளியீடு

    Byilankaisaivism 2020-03-232025-04-24

    சைவநெறிக் கற்போடு தத்துவத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தோடு இணைத்திடும் திருவிழாவாக, முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட “சைவம் போற்றுதும்” விழாவின்போது (04 – 07 – 2018) விழாவினைச் சிறப்பிக்குமாறு, “சைவம் போற்றுதும்” நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனை சிவத்திரு.கு.வை.க.வைத்தீசுவரக்குருக்கள் வெளியிட்டுவைக்க, முதற்பிரதியினை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகை அதிபர் திரு.திருமதி.அ.பி.ஜெயராஜா தம்பதியர் பெற்றுக்கொண்டனர். சைவசமயம்,சைவசமயத்தில் வழிபடு கடவுள், சைவ சமய நூல்கள், விடைக்கொடி என்னும் தலைப்புக்களில் கட்டுரைகளுடன், சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் வரலாறுகளையும், கழகத்தினால் சைவம்போற்றுதும் விழாவிற் விருதுவழங்கப்பட்ட சைவச்சான்றோர் பற்றிய சிறுகுறிப்புக்களையும்…

    Read More 2018ஆம் ஆண்டு சைவம் போற்றுதும் விழாவில் சைவம் போற்றுதும் நூல் வெளியீடுContinue

  • பொதுச் செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களின் பத்திரிக்கைப் பேட்டி
    2019 | அலகிலா ஆடல்-சைவத்தின் கதை | கழக வெளியீடுகள்

    பொதுச் செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களின் பத்திரிக்கைப் பேட்டி

    Byilankaisaivism 2020-03-232024-06-29

    இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூல் வெளியீட்டுக்கு ஏற்பட்ட வரவேற்பினால், தினக்குரல் பத்திரிக்கை  கழகப் பொதுச்செயலாளரிடம் பேட்டியெடுத்து 20-01-2019 ஆம் நாள் ஞாயிறு பதிப்பில் வெளியிட்டனர். தலைப்பு பத்திரிக்கை நிர்வாகத்தினால் இடப்பட்டது.

    Read More பொதுச் செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களின் பத்திரிக்கைப் பேட்டிContinue

  • அலகிலா ஆடல்- சைவத்தின் கதை  நூல் விமர்சனக் கட்டுரை
    2018 | அலகிலா ஆடல்-சைவத்தின் கதை | கழக வெளியீடுகள்

    அலகிலா ஆடல்- சைவத்தின் கதை நூல் விமர்சனக் கட்டுரை

    Byilankaisaivism 2020-03-232025-04-25

    இலங்கை சைவநெறிக் கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு. வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்- சைவத்தின் கதை நூல் குறித்து பத்திரிக்கையில் வந்த நூல் விமர்சனக் கட்டுரை

    Read More அலகிலா ஆடல்- சைவத்தின் கதை நூல் விமர்சனக் கட்டுரைContinue

  • அலகிலா ஆடல்,சிவப்பிரகாசக் கதவம் – கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழா
    2018 | கழக வெளியீடுகள் | சமயப்பணி

    அலகிலா ஆடல்,சிவப்பிரகாசக் கதவம் – கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழா

    Byilankaisaivism 2020-03-232025-04-26

    கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூலும், சித்தாந்தரத்தினம் திரு.ந.சிவபாலகணேசன் அவர்கள் எழுதிய சிவப்பிரகாசக்கதவம் நூலும் இலங்கை சைவநெறிக் கழகத்தால் 20- 10 – 2018ம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன.   இவ்வெளியீட்டு விழாவிற்கு முதன்மை விருந்தினராக பேராசிரியர் சி.பத்மநாபன் அவர்களும், திருவருள்மிகு விருந்தினர்களாக சிவத்திரு.கு.வை.க.வைத்தீஸ்வரக்குருக்கள், சிவத்திரு.சு.சிவராமக் கிருஷ்ணக்குருக்கள்,சித்தாந்தச்செம்மல் சிவத்திரு.ஈசான சொர்ணலிங்க தேசிகர் முதலியோரும், பீடுடை விருந்தினர்களாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.மா.தவயோகராஜா,அகில…

    Read More அலகிலா ஆடல்,சிவப்பிரகாசக் கதவம் – கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழாContinue

  • சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் பிரகடனம்
    2018 | சமயப்பணி | சைவம் போற்றுதும்

    சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் பிரகடனம்

    Byilankaisaivism 2020-03-232025-04-24

    நல்லை ஆதீன இரண்டாம் குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தப் பரமாச்சாரிய சுவாமிகளுடைய திருவருள் ஆணைக்கு அமைவாக, 2018ம் ஆண்டு நடைபெற்ற (07 – 04 – 2018) சைவம் போற்றுதும் விழாவில், இலங்கை சைவநெறிக் கழகத்தால் சிவபூமிச் சைவமுதலிகள், சிவபூமிச் சைவத்தேசிகர், சிவபூமிச் சைவத் தாதையர் பிரகடனம்  அரங்கேற்றப்பட்டது. சிவபூமிச் சைவமுதலிகளாக 1)ஶ்ரீலஶ்ரீ ஞானப்பிரகாசசுவாமிகள், 2)ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானார், 3)ஶ்ரீலஶ்ரீ காசிவாசி செந்திநாத ஐயர் பெருமானார், 4)ஶ்ரீலஶ்ரீ மாயவாததும்சகோளரி கதிரைவேற்பிள்ளை பெருமானார் ஆகியோரும், சைவத்தேசிகர்களாக 1)சைவப்பெரியார் திருவிளங்கம் தேசிகர் பெருமானார்,…

    Read More சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் பிரகடனம்Continue

  • இலங்கை கண்ட “முதலாவது” சைவம் போற்றுதும் 2018
    2018 | சமயப்பணி | சைவம் போற்றுதும்

    இலங்கை கண்ட “முதலாவது” சைவம் போற்றுதும் 2018

    Byilankaisaivism 2020-03-232025-04-25

    இலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் “சைவம் போற்றுதும்- 2018” என்கின்ற விழாவினை முதன்முதலில் 07ம் நாள் ஏப்பிரல் மாதம் 2018 அன்று, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அரங்கேற்றினர்.  இவ்விழாவிற்கு முதன்மை அனுசரணையை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகையினரும், துணை அனுசரணையை சைவநெறித் தொண்டர் கழகம்-கனடா, சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை -டென்மார்க்,லிட்டில் ஏசியா எம்போரிய ஆடையகத்தினர் வழங்கியிருந்தனர்….

    Read More இலங்கை கண்ட “முதலாவது” சைவம் போற்றுதும் 2018Continue

  • புத்தளம் பள்ளிவாசற்துறை சைவக்கிராமத்திற் கழகப்பணி 2018
    2018 | சமயப்பணி | சமூகப்பணி | சைவ அறநெறி

    புத்தளம் பள்ளிவாசற்துறை சைவக்கிராமத்திற் கழகப்பணி 2018

    Byilankaisaivism 2020-03-212025-04-24

    இலங்கை சைவநெறிக் கழகத்தினாற் புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமம் ஐயனார் ஆலயத்தினை மீளப்புதுப்பித்தல் பணிகளுக்கு 20,000/= நன்கொடையும், திரைச்சீலைகளும் வழங்கப்பட்டதுடன், ஆலயத்தின் அறநெறி வகுப்பில் கல்வி கற்கும் மாணவருக்கு சமயக்கருத்தரங்குகளை 04-03 – 2018ம் ஆண்டு  நடத்தியதுடன், அம்மாணவர்க்கு புத்தகப்பைகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.

    Read More புத்தளம் பள்ளிவாசற்துறை சைவக்கிராமத்திற் கழகப்பணி 2018Continue

  • 2018ம் ஆண்டு நாவலர் பெருமான் குருபூசையும் விழாவும்
    2018 | இ/சைவநெறிக் கழகம் | கழகத் தலைவர் உரைகள் | சமயப்பணி

    2018ம் ஆண்டு நாவலர் பெருமான் குருபூசையும் விழாவும்

    Byilankaisaivism 2020-03-212025-04-25

    பல்வேறு சமய அமைப்புக்களும் இணைந்து கொழும்பு மாநகரில் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் 9- 12- 2018ஆம் நாள்  நாவலர் விழாவினை நடத்தியபோது,  இலங்கை சைவநெறிக் கழகமும் அச்சைவ அமைப்புகளுடன் ஒன்றிணைந்து, சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை புரிந்தது. இவ்விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் (சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்) அவர்கள் நாவலர் பற்றிச் சொற்பொழிவு ஆற்றினார்.  

    Read More 2018ம் ஆண்டு நாவலர் பெருமான் குருபூசையும் விழாவும்Continue

Page navigation

Previous PagePrevious 1 … 10 11 12 13 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search