Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • இரத்தினபுரி கலத்துரத்தோட்ட அம்மன் ஆலயத்தில் அன்னதானப்பணி – 2019
    2019 | சமூகப்பணி

    இரத்தினபுரி கலத்துரத்தோட்ட அம்மன் ஆலயத்தில் அன்னதானப்பணி – 2019

    Byilankaisaivism 2020-05-072020-05-09

    இரத்தினபுரி மாவட்டத்தில் கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆண்டுதோறுமான திருவிழாவில் அன்னதானப்பணியை வழமைபோன்று இவ்வாண்டும் (23-03-2019) இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தியது. பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன்,பிரதிச்செயலாளர் திரு.கோ.இளையராஜா , பொருளாளர் திரு.இரா.இராஜ்குமார் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இப்பணி ஆண்டுதோறும் சிறப்புற நடைபெற்று வருவதுடன், அங்குள்ள மக்களுடன் இலங்கை சைவநெறிக் கழகம் இரண்டறக் கலந்துறவாட இது அருமையான வாய்ப்பாக அமைந்துவருதல் சிறப்பம்சமாகும்.

    Read More இரத்தினபுரி கலத்துரத்தோட்ட அம்மன் ஆலயத்தில் அன்னதானப்பணி – 2019Continue

  • தென்னிலங்கை ஈசுவரம் -ஆய்வுக்கட்டுரை
    2019 | இ/சைவநெறிக் கழகம்

    தென்னிலங்கை ஈசுவரம் -ஆய்வுக்கட்டுரை

    Byilankaisaivism 2020-03-252025-04-26

    இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரை அரங்கில் (2019-10-18), இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் (SLAS) அவர்கள் சமர்ப்பித்த தென்னிலங்கையில் அமையப்பெற்றுள்ள ஐந்தாவது ஈசுவரம் என்று நம்பப்படுகின்ற கோயில் சார்ந்த ஆய்வுக்கட்டுரை தெரிவாகி, பேராசிரியப்பெருமகனார் திரு. சி. பத்மநாதனார் தலைமையிற் நடைபெற்ற சபையோர் கூடிய அரங்கில் பல்லூடக அரங்க அளிக்கையாக அரங்கேற்றப்பட்டது.                              …

    Read More தென்னிலங்கை ஈசுவரம் -ஆய்வுக்கட்டுரைContinue

  • நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்
    2019 | கழகத் தலைவர் உரைகள் | சமயப்பணி

    நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்

    Byilankaisaivism 2020-03-252025-04-26

    தேசிய கல்வி நிறுவனத்தின் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசான தேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள், சைவசமயத்தில் நவராத்திரியின் விளக்கமும் வழிபாட்டு முறைகளும் சைவசித்தாந்த மரபில் சத்தி வழிபாட்டின் நெறிமுறையும் குறித்து சிறப்புரை வழங்கியிருந்தார். சிவத்திற்குப் பேதமாகச் சத்தி வழிபாடு கொள்ளுவது சிவாகமவிரோதம் என்றும், அவ்வாறான பூசை வழிபாடுகள் எல்லாம் பெருத்துவருவது சைவசமயப் பண்பாட்டிற்கு உகந்ததில்லையென்றும், சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என்னும் மரபில் கற்போடு நின்று வழிபடும் வழிபாட்டிற்கே…

    Read More நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்Continue

  • சொய்சாப்புர பொங்கல் விழாவில் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் உரை
    2020 | இ/சைவநெறிக் கழகம் | கழகத் தலைவர் உரைகள் | சமயப்பணி

    சொய்சாப்புர பொங்கல் விழாவில் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் உரை

    Byilankaisaivism 2020-03-252025-05-20

    மொரட்டுவை-இரத்மலானை(சொய்சாப்புர) அறிவொளி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவிற்கு (2020-02-02) முதன்மை விருந்தினராக இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழாவில், அறநெறிக் கல்வியின் தேவையை நம்சமூகம் நன்கு உணர்ந்தில்லை என்னும் கருப்பொருளில் முதன்மை உரையை ஆற்றினார்.

    Read More சொய்சாப்புர பொங்கல் விழாவில் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் உரைContinue

  • நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019
    2019 | சமயப்பணி

    நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

    Byilankaisaivism 2020-03-252025-04-27

    2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும்  சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும்  ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…

    Read More நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019Continue

  • புத்தளம் பெரியசந்திக்கிராம ஐயனார் ஆலயத்திற்கு பஞ்சலோக சிவலிங்கமூர்த்தம் வழங்கல்
    2019 | சமயப்பணி | சமூகப்பணி

    புத்தளம் பெரியசந்திக்கிராம ஐயனார் ஆலயத்திற்கு பஞ்சலோக சிவலிங்கமூர்த்தம் வழங்கல்

    Byilankaisaivism 2020-03-232025-04-28

    புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமத்திலுள்ள ஐயனார் ஆலயத்தில் சிவராத்திரி முதலிய வழிபாடுகளுக்கு சிவமூர்த்தம் இன்மையைச் சுட்டிக்காட்டி, அருகில் சிவவழிபாட்டுக்குரிய கோயில்கள் இன்மையையும் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்திடம் “சிவலிங்கம்” பெற்றுத்தருமாறு வேண்டுதற்கடிதம் ஊர்மக்களின் சார்பில் கோயில் நிர்வாகசபையினரால் அளிக்கப்பட்டிருந்தது. இக்கிராமம், இசுலாமிய மதத்தினரின் ஊர்களால் சூழப்பட்ட பகுதியில் இருக்கும் அடிப்படை வசதிகள் நலிந்த பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையிலுள்ள சைவத்தமிழ்க் கிராமம் என்பதனால்,  இக்கிராம மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கை சைவநெறிக் கழகத்தால் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டு, அகில இலங்கை…

    Read More புத்தளம் பெரியசந்திக்கிராம ஐயனார் ஆலயத்திற்கு பஞ்சலோக சிவலிங்கமூர்த்தம் வழங்கல்Continue

  • சமயதீக்கை வழங்கும் சிவப்பணி -2019
    2019 | சமயப்பணி

    சமயதீக்கை வழங்கும் சிவப்பணி -2019

    Byilankaisaivism 2020-03-232025-04-27

    இலங்கை சைவநெறிக் கழகமும் திருவாவடுதுறை ஆதீனத்தின் கொழும்பு சைவசித்தாந்த பயிற்சி மையமும் இணைந்து, பொதுச்சைவராய் விளங்கும் சைவசமயத்தாருக்கு “சைவ சமய தீக்கை” வழங்கும்அருள்நிகழ்ச்சி 01-09-2019ஆம் நன்னாளில்  பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோயில் (வஜீராப் பிள்ளையார் கோயில்) வளாகத்தில் சிவத்திரு.சிதம்பரநாதக்குருக்களைக் கொண்டுவித்து நடத்தப்பெற்றது. இந்நிகழ்வில் 25 பேர் சமயதீட்சை பெற்றுக்கொண்டதுடன், இரு கத்தோலிக்கர்களும் சைவசமய தீக்கையெடுத்து, சைவசமயத்தினைச் சாரும் நற்பேற்றினை உடையவராயினர்.                        …

    Read More சமயதீக்கை வழங்கும் சிவப்பணி -2019Continue

  • கொழும்பு விவேகானந்த  சபையிற் கழகத் தலைவரின் சொற்பொழிவு
    2019 | சமயப்பணி

    கொழும்பு விவேகானந்த சபையிற் கழகத் தலைவரின் சொற்பொழிவு

    Byilankaisaivism 2020-03-232025-04-28

    கொழும்பு விவேகானந்த சபையில் சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளின்பொருட்டு (27-01-2019) ஏற்பாடு செய்யப்பட்ட விவேகானந்தர் விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். “ஞானத்தினை நோக்கி நகர்ந்த சுவாமி விவேகானந்தர் கண்ட சைவசித்தாந்த தரிசனம்” என்னும் தலைப்பிற் கழகத்தின் தலைவர் அவர்கள் சொற்பொழிவாற்றினார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றிச் சாதித்ததற்குக் காரணம், அமெரிக்காவினர் ஆபிரகாமிய மதங்களைத் தவிர வேறொன்றினையும் அறிந்திராமையேயாகும். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காச் சொற்பொழிவுகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியபோது, முதலில் வந்தது இலங்கைக்கேயாகும்….

    Read More கொழும்பு விவேகானந்த சபையிற் கழகத் தலைவரின் சொற்பொழிவுContinue

  • சுவாமி விவேகானந்தர் சபை-அறநெறிப் பாடசாலையில் சைவ விழிப்புணர்ச்சி வகுப்பு 2019
    2019 | சமயப்பணி

    சுவாமி விவேகானந்தர் சபை-அறநெறிப் பாடசாலையில் சைவ விழிப்புணர்ச்சி வகுப்பு 2019

    Byilankaisaivism 2020-03-232025-04-27

    கொழும்பு சுவாமி விவேகானந்தர் சபையில் நடைபெறும் அறநெறி வகுப்புக்கு பயணம்செய்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களும், பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் செல்வி.செ.உதயகௌரி அவர்களும் ஏனைய கழக உறுப்பினர்களும் இணைந்து, அறநெறி வகுப்பிற் கல்விகற்கும் மாணவர்க்கு சமய விழிப்புணர்ச்சி வகுப்புகள் (20-01-2019) எடுத்தனர்.                                              …

    Read More சுவாமி விவேகானந்தர் சபை-அறநெறிப் பாடசாலையில் சைவ விழிப்புணர்ச்சி வகுப்பு 2019Continue

  • காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவு
    2019 | சமயப்பணி

    காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவு

    Byilankaisaivism 2020-03-232025-04-28

    தென்னிலங்கையில் காலிமாநகரில் முதன்மைக் காலி வீதியில் விளங்கும் அருள்மிகு மீனாட்சி உடனாய சுந்தரேசுவரப்பெருமான் திருக்கோயிலானது, சைவப்பெருமக்களால் காலிமாநகர் சிவன் கோயில் என்று அறியப்பட்டுவரும் சிறப்புடைய சிவாலயமாகும்.  05 -03 – 2019ஆம் நாள் இரவு சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு இத்திருத்தலத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர், இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் கணக்காளர் திரு.காண்டீபன் அவர்களுடன் பயணம் செய்து,” நம் சிவபெருமான் பெருமைகள்” என்னும் கருப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார்.

    Read More காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவுContinue

Page navigation

Previous PagePrevious 1 … 9 10 11 12 13 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search