Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • மாணிக்கவாசகர் பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்- 2020
    2020 | சமயப்பணி | திருவாசக முற்றோதல்

    மாணிக்கவாசகர் பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்- 2020

    Byilankaisaivism 2023-08-222025-05-20

    26 – 06 – 2020ஆம் நாளன்று மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறி கழகத்தினால், ஹேகிட்டிய வத்தளை முருகன் திருக்கோயிலில் மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையினையும் திருவாசக முற்றோதலும் ஒழுங்கமைக்கப்பட்டது. இந்நிகழ்வினை சமயப்பிரிவுக்குப் பொறுப்பான இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் திருமதி உதயகௌரி அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது. .

    Read More மாணிக்கவாசகர் பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்- 2020Continue

  • இரத்மலானை அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில்  சைவசமய தீக்கை ஏற்பாடு
    2020 | சமயப்பணி

    இரத்மலானை அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சைவசமய தீக்கை ஏற்பாடு

    Byilankaisaivism 2023-08-222025-05-20

    செம்டெம்பர் மாதம் 14ம் திகதி இலங்கை சைவநெறிக் கழகம், நாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தினுடனும் இணைந்து கொழும்பு இந்துக் கல்லூரி – இரத்மலானையில் விளங்கும் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சிவத்திரு.மகாலிங்கக்குருக்கள் பெருமகனாரினை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைப்பித்து சைவசமய தீக்கை வழங்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.

    Read More இரத்மலானை அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சைவசமய தீக்கை ஏற்பாடுContinue

  • தமிழ்நாட்டின் பேரூர் ஆதீனம் ஏற்பாடு செய்த நாவலர் பெருமான் குருபூசை நிகழ்வு
    2020 | சமயப்பணி

    தமிழ்நாட்டின் பேரூர் ஆதீனம் ஏற்பாடு செய்த நாவலர் பெருமான் குருபூசை நிகழ்வு

    Byilankaisaivism 2023-08-222025-05-20

    தமிழ்நாட்டில் உள்ள வீரசைவ மரபினைச் சேர்ந்த பேரூர் ஆதீனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட தவத்திரு ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசையினை முன்னிட்டான இணையவழி நிகழ்வு 07 – 12 – 2020 ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணையவழியினூடாக இணைந்து கொண்டு, கழகத் தலைவர் அவர்கள் நாவலர்பெருமான் பற்றிய சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தார்.

    Read More தமிழ்நாட்டின் பேரூர் ஆதீனம் ஏற்பாடு செய்த நாவலர் பெருமான் குருபூசை நிகழ்வுContinue

  • கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை
    2020 | சமூகசேவை | சமூகப்பணி

    கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை

    Byilankaisaivism 2023-08-222025-05-20

    கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடல்களினைத் தடைசெய்தபோது மக்களிடம் கோயில் திருவிழாக்களினை நடத்துதல் குறித்து குழப்பங்கள் எழும்பியபோது, இலங்கை அரசாங்கத்தின் செயல், மருத்துவ விஞ்ஞானபூர்வமானதென்பதினால் சைவமக்கள் அதனை மதித்தொழுக வேண்டும் என்பதுடன், சிவாகமங்கள் நாட்டில் அபாயங்கள் எழும்போது ஆலயப்பூசைகள் விழாக்கள் தடைப்படுவதினை ஏற்று அருள்வதினைச் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை.

    Read More கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைContinue

  • இலங்கை சைவநெறிக் கழகத்தின் கோவிட்கால உதவி
    2020 | சமூகப்பணி

    இலங்கை சைவநெறிக் கழகத்தின் கோவிட்கால உதவி

    Byilankaisaivism 2023-08-222025-05-20

    இலங்கை சைவநெறிக் கழகத்தினால் கோவிட் காலப்பகுதியில் புத்தளம் கல்பிட்டி பெரியபள்ளிவாசல்துறையினைச் சேர்ந்த ஐயனார் கோயில் நிர்வாகத்தினூடாக நிதியுதவி அளித்து, வாழ்வாதார உணவுப் பொதி கிராமமக்களுக்கு வழங்கப்பட்டது. மலையகத்தில் தெனியாயப் பிரதேசத்தில் தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தினூடாக நிதியுதவி அளித்து, அத்தியாவசிய உணவுப்பொதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகமும் பங்கேற்றது.

    Read More இலங்கை சைவநெறிக் கழகத்தின் கோவிட்கால உதவிContinue

  • யாழ்ப்பணத்தில்  இருநூல் அறிமுக விழா
    2019 | அலகிலா ஆடல்-சைவத்தின் கதை | கழக வெளியீடுகள் | சமயப்பணி

    யாழ்ப்பணத்தில் இருநூல் அறிமுக விழா

    Byilankaisaivism 2023-08-222025-04-26

    2019 – 09 – 21ஆம் திகதி யாழ்ப்பணத்தில் இணுவில் அறிவாலயம் மண்டபத்தில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கைக்குரிய திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த வகுப்புகளில் சிவஞானபோதப் பாடம் எடுத்துவரும் சைவப்புலவர் சு.செல்லத்துரை பெருமகனாருக்கு “சைவநெறிச் செம்மல்” விருது வழங்கி, இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் போற்றப்பட்டார். (வலம்புரி பத்திரிக்கையில் வந்த இருநூல் அறிமுக விழாச் செய்தி)

    Read More யாழ்ப்பணத்தில் இருநூல் அறிமுக விழாContinue

  • இடபக்கொடியினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமே தவிர்க்கவேண்டிய இடர் –  கழகம் வெளியிட்ட எதிர்ப்பு!
    2015 | இடபக்கொடி | சமயப்பணி | சைவசமய இடர்களைவுப் பணி

    இடபக்கொடியினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமே தவிர்க்கவேண்டிய இடர் – கழகம் வெளியிட்ட எதிர்ப்பு!

    Byilankaisaivism 2023-08-182024-06-29

    இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட “திருமுறையும் சைவத்திருநெறியும்” என்கின்ற சைவத்திருமுறை மாநாட்டில் இடபக்கொடிகளினால் வீதிகளும் விழா மண்டபமும் அலங்கரிக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் இந்து ஸ்வயம் சேவா சங்கம் முதலியவற்றின் ஆலோசனையினை ஏற்று அந்த அமைப்பின் இலங்கைக்குரிய கௌரவத்தலைவர் முதலிய பதவிகளில் இருந்தமையினால், இடபக்கொடியினை பயன்படுத்துவதில் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை. இடபக்கொடிக்குப் பதிலாக காவிக்கொடியினையே தூக்கிப்பிடிக்கும் செயலுக்கு துணை நிற்கலாயினார். இச்சந்தர்ப்பத்தில் நடந்த இவ்விழாவில், அமைச்சரின் மனதிற்கு இதமாக…

    Read More இடபக்கொடியினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமே தவிர்க்கவேண்டிய இடர் – கழகம் வெளியிட்ட எதிர்ப்பு!Continue

  • சிவபூசை நூல்களும் செயன்முறைக் காணொளிகளும்
    சைவ நூல்கள்

    சிவபூசை நூல்களும் செயன்முறைக் காணொளிகளும்

    Byilankaisaivism 2021-01-042024-12-05

    சிவபூசை இருவகைப்படும். ஒன்று ஆன்மார்த்த சிவபூசை. மற்றையது பரார்த்த சிவபூசை. ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் தானே, தன்பொருட்டுச் செய்துகொள்வதாகும். பரார்த்த சிவபூசை என்பது நாட்டின் நலன்பொருட்டும் உலகத்தார் நலன்பொருட்டும் செய்யும் பூசையாகும். ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் செய்துகொள்ளவேண்டியவொன்றாகும். இது இருவகைப்படும். ஒன்று சிவாகமவழி விசேடத் தீக்கைகளுடன் செய்துகொள்ளும் ஆன்மார்த்த சிவபூசை. இப்பூசை சிறப்பு ஆன்மார்த்த சிவபூசை என்று போற்றுதற்குரியது. மற்றையது, அன்புமார்க்கமாய்ச் செய்யும் சிவபூசையாகும். இது பொது ஆன்மார்த்த சிவபூசை என்று…

    Read More சிவபூசை நூல்களும் செயன்முறைக் காணொளிகளும்Continue

  • சைவ ஆகம நூல்கள்
    சைவ ஆகம நூல்கள் | சைவ நூல்கள்

    சைவ ஆகம நூல்கள்

    Byilankaisaivism 2021-01-042021-01-05

    குமாரதந்திர ஆகமம், உத்தர காமிக ஆகமம் என்பன தமிழ்மொழிபெயர்ப்புடன் உள்ளபோதும் அவை இணையத்தில் காணக்கூடியதாகவில்லை.தினமலரில் இணையத்தில் காணப்படும் உத்தர காமிக ஆகமமும் மூலத்தோடு மொழிபெயர்ப்பாக பதியப்படவில்லை.மேலும்,தரவிறக்கும் வசதியும் இல்லை.இதனால், அவை PDF ஆக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளன. பூர்வ காமிக ஆகமம் ஏற்கனவே தமிழ்மொழிபெயர்ப்புடன் இணையத்தில் உள்ளன.அவற்றுக்குரிய சொடுக்கிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகையான ஆகமங்கள் தமிழிலும்-ஆங்கிலத்திலும் உள்ளன. அவற்றின் சொடுக்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.இணையத்திலுள்ள சைவசமய ஆகம நூல்களையெல்லாம் இயன்றவரை இங்கு தொகுத்துள்ளோம். சைவாலயக்குருமார்களும் ஆலய நிர்வாகசபை உறுப்பினர்களும்…

    Read More சைவ ஆகம நூல்கள்Continue

  • சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம்
    2018 | சமயப்பணி | சைவம் போற்றுதும்

    சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம்

    Byilankaisaivism 2020-05-102025-04-24

    சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம் இல்லாக்குறையை நீக்கும்பொருட்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 2018ம் ஆண்டு நடைபெற்ற சைவம்போற்றுதும் விழாவிற்காக வரைந்துகொள்ளப்பட்ட திருவுருவப்படம். | இலங்கை சைவநெறிக் கழகத்தின் வேண்டுகோளினை ஏற்று, கழகத்தின் தலைவர்,பொதுச்செயலாளர் ஆகியோரின் சிந்தனைகளை உள்வாங்கி ஓவியமாக வெளிக்கொண்டு வந்த ஓவியர் ஞானகுரு அவர்களுக்கு சைவம்போற்றுதும் விழாவில்(07-04-2018)  இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பளிக்கப்பட்டார்.

    Read More சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம்Continue

Page navigation

Previous PagePrevious 1 … 4 5 6 7 8 … 12 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search