திருமந்திரம் -சொற்பொழிவுகள்
திருமந்திரம் -சொற்பொழிவுபன்னிரு தமிழ்வேதப் பெருவிழா-திருமந்திரம் -சொற்பொழிவு பகுதி 1பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா-திருமந்திரம் -சொற்பொழிவு பகுதி 2திருமந்திர மாநாட்டு உரை
திருமந்திரம் -சொற்பொழிவுபன்னிரு தமிழ்வேதப் பெருவிழா-திருமந்திரம் -சொற்பொழிவு பகுதி 1பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா-திருமந்திரம் -சொற்பொழிவு பகுதி 2திருமந்திர மாநாட்டு உரை
பகுதி 1பகுதி 2பகுதி 3பகுதி 4பகுதி 5
சுந்தரர் புராணம் சொற்பொழிவு-செந்தமிழரசு சிவத்திரு. சிவகுமாரனார் பெருந்தகையர்
அட்டன் நகருக்கு அண்மையில் பேயார்லோன் தோட்டத்தில் உள்ள மாணவர்க்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் பயிற்சிப்புத்தகங்கள்(கொப்பிகள்), எழுதுகோல்கள் (பென்சில்,பேனைகள்) ஒருதொகையை இலங்கை சைவநெறிக் கழகத்தின் சார்பில் சனவரி 2019களில் தமது சொந்தப்பணத்தில் வாங்கி வழங்கியிருந்தார்கள். .
சைவசித்தாந்தம் தமிழருடையதா? சைவசித்தாந்தத்தை ஒருசாரார் தமிழருடையதென்றும், ஒருசாரார் தமிழருடன் சம்பந்தம் செய்வது சிவத்துரோகம் என்றும் வாதிட்டவாறுள்ளனர். மெய்கண்டாரின் சிவஞானபோதத்தை ரௌரவ ஆகமத்திலுள்ள பன்னிரண்டு சூத்திரங்களின் மொழிபெயர்ப்பென்ற வாதப்பிரதிவாதங்கள் சைவசித்தாந்தத்தைத் தமிழருடன் சம்பந்தப்படுத்துவதில் ஏற்பட்டுமுள்ளது. சைவ சித்தாந்தத்தைத் தமிழருடன் சம்பந்தம் செய்வது ஏற்புடையதா என்பதை சைவ நூல்கள் கொண்டு ஆராய்வோம்.அதுவே தெளிவான விடையைத் தரும். நால்வேதங்கள் உலக மக்கள் யாவர்க்கும் பொதுவான நூலாயினும், வேதங்களை ஏற்றுக்கொள்ளும் வைதீகர்களுக்கே அவை சிறப்பானவையாம்.ஏனெனில் ஏனையோர் நால்வேதங்களை ஏற்கார். அதுபோல; இந்துப் பண்பாடானது…
இலங்கையில் அந்தணர் தம்பெயரைப் பாவிக்கும் போது பிரம்மஶ்ரீ என்பது பெரிதும் புழக்கத்திலுண்டு.பெரும்பாலான குருக்கள்மாரும் ஏனைய பூசகர்களும் இங்ஙனம் பெயருக்கு முன்னால் இட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர்களாகவுள்ளனர். ஆச்சாரிய அபிடேகம் செய்துகொள்ளாதவர்கள், தாம் சிவஶ்ரீ(சிவத்திரு) என்று போட்டுக்கொள்ள முடியாதென்பதால், பிரம்மஶ்ரீ போட்டுக்கொள்வதாக கூறுகின்றனர். ஏனைய பூசகர்பணி செய்யாதவரும் பிரம்மஶ்ரீ போட்டுக்கொள்வதற்கு இதையே விளக்கமாக உரைக்கின்றனர். 1) இறைவன்(பிரம்மம்) என்பது பொதுப்பெயர். சிவம் என்பது சிறப்புப் பெயர். எதற்கு மங்கலமும் திருவருட்சிறப்பும் மிகுதியாய் உண்டென்றால், ஒப்பற்ற தன்மையில் மிகுந்து உயர்ந்ததாய் இருப்பது…
அண்மையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீட்டில் வெளிவந்திருந்த, ஆய்வாளர் வி.துலாஞ்சனன் அவர்களின் “அலகிலா ஆடல் – சைவத்தின் கதை” மற்றும் திருமுறைச்செல்வர் ந. சிவபாலகணேசன் அவர்களின் “சிவப்பிரகாச கதவம்” ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 29-12-2018 அன்று மட்டக்களப்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமாகிய திரு.மா. உதயகுமார் பிரதம விருந்தினரான கலந்து கொண்ட இந்நிகழ்வில் அருள்விருந்தினராக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் குருக்கள் சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்கள் அவர்களும், சிறப்பு…
2018 மார்ச்சு மாதம் 17ம் நாள், இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆண்டுதோறுமான திருவிழாவின்போது, வழமைபோன்று இவ்வாண்டும் அன்னத்தானப்பணியைப் பொறுப்பெடுத்து இலங்கை சைவநெறிக் கழகம் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களின் தலைமையில் செவ்வனே இச்சிவப்பணியை நிறைவேற்றியது. இப்பணியினைத் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கழகத்தாரும் மேற்கொண்டுவருவதால் அங்குள்ள மக்களும் கழகத்தாருடன் நல்லதொரு உறவினை வலுப்படுத்தியுள்ளார்கள். 2014ம் ஆண்டு,2016ம் ஆண்டு, 2017ம் ஆண்டு,2018ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் இலங்கை சைவநெறிக் கழகம்( சைவசமூகத் திருப்பணிக் கழகம்) செவ்வனே…
2016ம் ஆண்டு மார்ச்சு மாதம் இரத்தினபுரி-கலத்துரத்தோட்டத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவின்போது, சைவசமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) 2014ம் ஆண்டில் அன்னதானப்பணியைப் பொறுப்பெடுத்தமைபோன்று, இம்முறைத் திருவிழாவிலும் அன்னதானப்பணியினைப் பொறுப்பெடுத்து நடத்தியிருந்தோம். 2014ம் ஆண்டில் பொறுப்பெடுத்தமைக்கு அடுத்ததாக, இவ்வாண்டு மீண்டும் பொறுப்பெடுக்கப்பட்டது. இதனூடாக கழகத்துக்கும் ஊர்மக்களுக்கும் இடையே உறவுப்பாலத்தினை உருவாக்குதல்-வளர்த்தல் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குரிய நல்ல அறிகுறிகள் இவ்வாண்டு நடைபெற்ற அன்னதானப்பணியினூடாக கழகத்தினால் உணரப்பட்டது.