சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2017
சிவராத்திரித் திருநாளில் (24-02-2017 )சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் கொழும்பிலுள்ள சைவாலயங்களில் கழகத்தாரால் விநியோகிக்கப்பட்டது.
சிவராத்திரித் திருநாளில் (24-02-2017 )சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் கொழும்பிலுள்ள சைவாலயங்களில் கழகத்தாரால் விநியோகிக்கப்பட்டது.
சிவராத்திரித் திருநாளினை முன்னிட்டு 07-03-2016 ஆம் நாள் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களின் தலைமையில் கொழும்பில் உள்ள சைவாலயங்களில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டன.
சிவராத்திரித் திருநாளில் 07-03-2016 ஆம் நாள் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமைப் பணியகத்தில் மாமன்ற விடுதி மாணவரிடத்தே சைவசமய விழிப்புணர்வுக் கருத்தரங்கு கழகத் தலைவர் சைவத்திரு.கி.பிரதாபன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கேள்வி பதில்களாகச் சைவசமய விழுமியங்கள் மாணவரிடம் பரிமாறப்பட்டது.சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களும் ஏனைய கழக உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன், மாமன்றப் பொதுச்செயலாளர் திரு.தில்லை நடராசா அவர்களும், மாமன்ற உபதலைவர் விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்களும் தலைமை வகித்தனர்.
இந்துத்துவ சுமார்த்தமத தரகர்களின் சூழ்ச்சியினால் இலங்கைப் பிரதமர் திரு.இரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்பில் இலங்கை சைவாலயப் பூசகப்பிராமணர் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் சைவாலய சிவாகமப் பூசைப்பயிற்சிக்கு அனுப்பிவைக்கும் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகச் செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இதனை இலங்கையில் உள்ள இந்துகுருமார் அமைப்புக்கள் சிலவும் வரவேற்று அறிக்கைகள் வெளியிட்டன. தமிழ்நாட்டில் காஞ்சி சங்கரமடம் சிவாகமப்பாடசாலை ஒருசில சிவாசாரியரைக் கொண்டு நடத்திவருகின்றனர். இப்பாடசாலையிலேயே இவ்வாறு இலங்கை சைவாலய அந்தணர் இலங்கை அரசால் இந்துசமய கலாசார அமைச்சினூடாக சேர்க்கும்…
சிவராத்திரி அருட்திருநாளில் 17 -02- 2015ஆம் நாள் கொழும்பில் பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் கோயிலில் கழகத்தால் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
கழக உறுப்பினர் திரு.அ.கஜந்தன், திரு.ச.தாஸ்குமார் ஆகியோர் திருக்கோணேசுவரத் திருத்தலத்திற்கு 2015- 03- 14ஆம் நாள் செல்லும்பேறு பெற்றபோது, திருக்கோயில் அடியார்களுக்கு கழகத்தின் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரத்தினை விநியோகித்தனர்.
கொழும்பு 13 ஸ்ரீ கதிரேசன் வீதி அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாணத் திருவிழாப் பெருநாளில்(23-05-2022), திருக்கோயிலின் அறங்காவலர் சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனார் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, வழிபட வருகைதந்திருந்த கனடாவாழ் சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் ”சைவமாமணி” விருது வழங்கிப் பாராட்டியது. கனடாவில் இலங்கை சைவமக்களிடையே சைவசமயப் போதனைகளினை நன்றே முன்னெடுத்துவருதல் பொருட்டும், இலங்கையில் அவருடைய சொந்த மண்ணிலும் ஏனைய இடங்களிலும் பல்வேறு சைவசமய அறப்பணிகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்திவருதல் பொருட்டும் இலங்கை சைவநெறிக்…
அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 03- 07 – 2022ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது. அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது.
சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை என்னும் தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 15 – 12 – 2021ம் திகதி தொடக்கம் 20 – 12- 2021ம் திகதி வரை தமிழ்நாட்டு சைவ அறிஞர்களினையும் இணைத்து சிறப்புற ஒழுங்குசெய்யப்பட்டது.
இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத் தீக்கைகளினையும் , சிவஸ்ரீ சிவ.கமல்ராஜ்குருக்கள் சிவாசாரியரினைக் கொண்டுவித்து, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி சிங்காரவேலவன் சிவகாயத்திரி சந்நிதானத்தில் வழங்கும் சிவப்பணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் சைவஞானபானு ஆறுதிருமுருகனார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்ந்தியிருந்தார்.