தென்றல் சஞ்சிகையில் அலகிலா ஆடல்-சைவத்தின் கதை

சித்திரை- ஆனி 2019 தென்றல் சஞ்சிகையில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட, இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளரால் எழுதப்பட்ட ”அலகிலா ஆடல்-சைவத்தின் கதை” நூல் அறிமுகம் வெளியிடப்பட்டிருந்தது. அலகிலா ஆடல் சைவத்தின் கதை நூலினையும் சிவப்பிரகாசக் கதவம் நூலினையும் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளமுடியும்.

comments

Similar Posts

  • |

    சமயதீக்கை வழங்கும் சிவப்பணி -2019

    இலங்கை சைவநெறிக் கழகமும் திருவாவடுதுறை ஆதீனத்தின் கொழும்பு சைவசித்தாந்த பயிற்சி மையமும் இணைந்து, பொதுச்சைவராய் விளங்கும் சைவசமயத்தாருக்கு “சைவ சமய தீக்கை” வழங்கும்அருள்நிகழ்ச்சி 01-09-2019ஆம் நன்னாளில்  பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோயில் (வஜீராப் பிள்ளையார் கோயில்) வளாகத்தில் சிவத்திரு.சிதம்பரநாதக்குருக்களைக் கொண்டுவித்து நடத்தப்பெற்றது. இந்நிகழ்வில் 25 பேர் சமயதீட்சை பெற்றுக்கொண்டதுடன், இரு கத்தோலிக்கர்களும் சைவசமய தீக்கையெடுத்து, சைவசமயத்தினைச் சாரும் நற்பேற்றினை உடையவராயினர்.                        …

  • | |

    மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்

    மன்னார்-திருக்கேதீச்சுவரத்தில் அமைந்துள்ள மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினால் 11-07- 2019ம் நாள் நடத்தப்பட்ட சைவவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சிவத்திரு.மரு.திரு.கி.பிரதாபன் ஈசான  தேசிகர் அவர்கள், சைவநெறி சாருதல் தவப்பயனின் விளைவு என்னும் கருப்பொருளில் சிறப்புரையும் ஆற்றினார்கள். சைவசமயத்தார் ஆபிரமாகிய மதங்களின் போலிப்பிரச்சாரங்களுக்குள்ளும் அழுத்தங்களுக்கும் உள்ளாகி மதம் மாறுவதற்கு, இந்துவென்ற பெயரில் சைவசமயத்தாரிடம் ஊடுருவி நிற்கும் ”அனைத்தும் ஒன்றுதான்” என்னும் உளவியல் உறுதியின்மையே காரணம் என்றும், ”அனைத்தும் ஒன்றுதான் என்று சிவபெருமானும் சனைச்சரனும்…

  • |

    ஐயம் தெளிதல் – 2019

    சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட  கேள்விகளுக்கு விடையளித்தார்.      

  • | |

    பொதுச் செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களின் பத்திரிக்கைப் பேட்டி

    இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூல் வெளியீட்டுக்கு ஏற்பட்ட வரவேற்பினால், தினக்குரல் பத்திரிக்கை  கழகப் பொதுச்செயலாளரிடம் பேட்டியெடுத்து 20-01-2019 ஆம் நாள் ஞாயிறு பதிப்பில் வெளியிட்டனர். தலைப்பு பத்திரிக்கை நிர்வாகத்தினால் இடப்பட்டது. comments

  • |

    நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

    2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும்  சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும்  ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…

  • |

    சங்கமன்கண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்குக் கழகத்தின் நிதியுதவி

    தாண்டியடி,திருக்கோவில் பிரதேசத்தைச் சார்ந்த சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத் திருப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் ரூபா 10,000 நன்கொடை  (10-01-2019) வழங்கப்பட்டது. இவ்வாலயச் சூழலுள் பிறமதத்தாரின் ஆக்கிரமிப்புக்களும் பாதுகாப்புப் படையினரின் தலையீடுகளும் இருந்துவருவதால், இவ்வாலயத்தினைப் பலப்படுத்தவேண்டியது தமிழருக்கு இப்பூமி பூர்வீக உரித்துடையதென்பதை பலப்படுத்தும் வரலாற்றுப் பணியென்பதை இலங்கை சைவநெறிக் கழகம் நன்குணர்ந்து, அவர்களின் ஆலயக் கட்டுமானப்பணிகளுக்கு இந்நிதியுதவி மேற்கொள்ளப்பட்டிருந்தது. comments