Similar Posts
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 – 11 – 2021ஆம் நாளன்று மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக் கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது. comments
யாழ்ப்பாணத்தில் சைவசமய, சிவ தீக்கை வழங்கும் சிவப்பணி 2021
இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத் தீக்கைகளினையும் , சிவஸ்ரீ சிவ.கமல்ராஜ்குருக்கள் சிவாசாரியரினைக் கொண்டுவித்து, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி சிங்காரவேலவன் சிவகாயத்திரி சந்நிதானத்தில் வழங்கும் சிவப்பணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் சைவஞானபானு ஆறுதிருமுருகனார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்ந்தியிருந்தார். comments
மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி – கழகத் தலைவரின் கட்டுரை
அருள்மிகு மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் பற்றி கழகத் தலைவரால் எழுதப்பட்ட சிறப்புக்கட்டுரை, வீரகேசரிப் பத்திரிக்கையில் வெளியாகியது. comments
மாணிக்கவாசகர் பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்- 2020
26 – 06 – 2020ஆம் நாளன்று மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறி கழகத்தினால், ஹேகிட்டிய வத்தளை முருகன் திருக்கோயிலில் மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையினையும் திருவாசக முற்றோதலும் ஒழுங்கமைக்கப்பட்டது. இந்நிகழ்வினை சமயப்பிரிவுக்குப் பொறுப்பான இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் திருமதி உதயகௌரி அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது. . comments
நாவலர் மாநாடு மலர் மறுபதிப்பு வெளியீட்டு விழாவில் கழகம்
1969ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையால் வெளியிடப்பட்ட நாவலர் மாநாட்டு மலரினை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையால் மறுபதிப்பாக அச்சேற்றப்பட்டு, 03-08-2013 ஆம் நாள் கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நாவலர் மாநாடு மலர் மறுபதிப்பு வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் மண்டப நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதோடு, நூல்களை மண்டபத்தில் விற்கும் பொறுப்பினையும் ஏற்று, சைவசமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) மரு.கி.பிரதாபன் அவர்களின் தலைமையில் அவற்றையெல்லாம் செவ்வனே நிறைவேற்றியிருந்தது.
மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் சொற்பொழிவு 2023
மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் திருவிழாக் காலத்தில் 26-02- 2023 ஆம் நாள் இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.மரு. ஈசானதேசிகர் கி.பிரதாபன் அவர்கள் சைவத்திரு.புண்ணியசீலன் ஐயா அவர்களின் விண்ணப்பத்தில் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தத் திருவருள் கூடியது. மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் திருவிழாக் காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுக்கு நேரம் ஒதுக்கி, சைவமக்கள் சொற்பொழிவுகளால் ஆற்றுப்படுத்தும் பெருஞ்சிவதொண்டினைப் பல்லாண்டுகளாகச் சைவத்திரு.புண்ணியசீலன் ஐயா அவர்களின் மேற்பார்வையில் நடத்திவருகின்றனர். comments

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)