Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • சிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்பு
    2015 | சமயப்பணி | சிவராத்திரி | நிதியுதவி

    சிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்பு

    Byilankaisaivism 2025-07-012026-03-21

    சிவராத்திரிப் பெருநாளில் உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையினால் நடத்தப்படும் நந்திக்கொடி நிதிசேகரிப்புக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றியது.  நந்திக்கொடிச் சின்னம் வழங்கி உண்டியல்களில் நிதிசேகரித்து அந்த நிதியைக் கொண்டு உலக சைவப் பேரவை இலங்கைக் கிளை இலங்கை முழுதும் பல்வேறு சைவப்பணிகளை முன்னெடுத்துவரும் அமைப்பாகும்.  எனவே, இப்பெருஞ் சிவப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் உதவக்கூடியதாக அமைந்தது பெரும்பேறாகும்.

    Read More சிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்புContinue

  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021
    2021 | சமயப்பணி | வாழ்வியல்

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021

    Byilankaisaivism 2025-05-222026-03-21

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 – 11 –  2021ஆம் நாளன்று  மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக் கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது.

    Read More ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021Continue

  • செவ்வண்ணன் அடிசேர்ந்த சேக்கிழார் அடிப்பொடியார்
    2021 | சமயப்பணி | சைவப்பெரியார்

    செவ்வண்ணன் அடிசேர்ந்த சேக்கிழார் அடிப்பொடியார்

    Byilankaisaivism 2025-05-222026-03-21

    தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பெரும் பணிகள் பல ஆற்றிய சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரனார் அவர்கள் கடந்த 2021இல் தன் சிவபதம் அடைந்தார். சைவசித்தாந்தம், பாரதியார் பற்றி பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ள அன்னார், பெரியபுராணம் மீது கொண்ட ஈடுபாட்டால் தனக்கு “சேக்கிழார் அடிப்பொடி” எனும் புனைபெயரைச் சூடிக்கொண்டவர். அவருடைய சிவபதப்பேறுக்கு திருவருளை விண்ணப்பித்தும், அவர் வையக வாழ்வை நீத்தமையினால் பிரிவுத்துயரில் விளங்கும் அவருடைய உறவினர் மாணாக்கர் சைவாபிமானியர் யாவருடனும் அன்புபாராட்டும் வகையிலும் இலங்கை சைவநெறிக் கழகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்…

    Read More செவ்வண்ணன் அடிசேர்ந்த சேக்கிழார் அடிப்பொடியார்Continue

  • பாடசாலை சுவரோவியத்துக்கு கழகத்தின் நிதியுதவி
    2021 | சமூகப்பணி | தென்னிலங்கை | நிதியுதவி

    பாடசாலை சுவரோவியத்துக்கு கழகத்தின் நிதியுதவி

    Byilankaisaivism 2025-05-222026-03-21

    களுத்துறை பயாகெல தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் வகுப்பறைச் சுவர்களில் பாடத்திட்டத்துக்கு துணையாக விளங்கக்கூடிய சித்திரங்கள் வரைவதற்குரிய நிதித்தொகை 12,000 ரூபாய் இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

    Read More பாடசாலை சுவரோவியத்துக்கு கழகத்தின் நிதியுதவிContinue

  • 2020 | கட்டுரை | சமயப்பணி | சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகனார் கட்டுரைகள்

    மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி – கழகத் தலைவரின் கட்டுரை

    Byilankaisaivism 2025-05-202026-03-21

    அருள்மிகு மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் பற்றி  கழகத் தலைவரால் எழுதப்பட்ட சிறப்புக்கட்டுரை, வீரகேசரிப் பத்திரிக்கையில் வெளியாகியது.

    Read More மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி – கழகத் தலைவரின் கட்டுரைContinue

  • சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுரப் பணி 2022
    2022 | சமயப்பணி | துண்டுப்பிரசுரம்

    சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுரப் பணி 2022

    Byilankaisaivism 2025-05-20

    கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு (01-03-2022) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.                              

    Read More சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுரப் பணி 2022Continue

  • 2021 | சமயப்பணி

    பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டுத் துண்டுப்பிரசுரப்பணி 2021

    Byilankaisaivism 2025-05-20

    கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப்பெருநாளை முன்னிட்டு (11- 03-2021) சைவசமயத் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.      

    Read More பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டுத் துண்டுப்பிரசுரப்பணி 2021Continue

  • 2020 | சமயப்பணி | துண்டுப்பிரசுரம்

    சிவராத்திரிப் பெருநாள் சைவ விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரம் 2020

    Byilankaisaivism 2025-05-202026-03-21

    கொழும்பு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் திருக்கோயிலில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் சிவராத்திரிப்பெருநாளை (21-02-2020) முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்டது.

    Read More சிவராத்திரிப் பெருநாள் சைவ விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரம் 2020Continue

  • 2014 | சமயப்பணி

    கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத்தில் துண்டுப்பிரசுரங்கள் கையளித்தல் 2014

    Byilankaisaivism 2025-05-20

    கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத் திருக்கோயிலுக்கு ஒருதொகைத் துண்டுப்பிரசுரம் கையளித்தல் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) உறுப்பினர் மருத்துவர் ஆசைப்பிள்ளை சயூரதன் அவர்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சுவரத்தில்  திருக்கோயிலுக்கு வரும் அடியாருக்குக் கையளிப்பதற்காகக் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் 21-10-2014ஆம் திகதியன்று ஒருதொகைத் துண்டுப்பிரசுரங்களைக் கோயிற் தொண்டரிடம் வழங்கி வைத்தார்.

    Read More கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத்தில் துண்டுப்பிரசுரங்கள் கையளித்தல் 2014Continue

  • ஊர்க்காவற்றுறையில் சைவப்பெயர்களைக் காத்த இலங்கை சைவநெறிக் கழகம்
    2020 | சமயப்பணி

    ஊர்க்காவற்றுறையில் சைவப்பெயர்களைக் காத்த இலங்கை சைவநெறிக் கழகம்

    Byilankaisaivism 2025-05-202025-05-20

    ஊர்க்காவற்றுறையில் விளங்கும் சைவப்பெயர்களுடனான வீதிகளுக்கு கிருத்தவப் பெயர்கள் வைக்கும் செயன்முறையொன்று ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபையைப் பயன்படுத்திக் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் மேற்கொண்ட செயலானது, இலங்கை சைவநெறிக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனே,  பல்வேறு சைவ அமைப்புக்களுடனும் தொடர்புகொண்டு கண்டனக் கடிதங்களை ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ததோடு, இலங்கை சைவநெறிக் கழகமும் வீதிகளுக்கு சைவப்பெயர்களை அழித்து கிருத்தவப் பெயர்களைப் புகுத்தும் செயல் இலங்கையில் தமிழரிடையே ஒற்றுமையைக் குலைக்கும் என்பதனை விளக்கி, இச்செயலைக் கைவிடுமாறு ஊர்காவற்றுறைப் பிரதேச…

    Read More ஊர்க்காவற்றுறையில் சைவப்பெயர்களைக் காத்த இலங்கை சைவநெறிக் கழகம்Continue

Page navigation

1 2 3 … 12 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search