Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும் 2023
    2023 | சமயப்பணி | திருவாசக முற்றோதல்

    அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும் 2023

    Byilankaisaivism 2026-05-202026-05-20

    இலங்கைச் சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கைச் சைவநெறித் தொண்டர் கழகமும் இணைந்து ஏற்பாடுசெய்த அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்,  வத்தளையில் ஹேகிட்டிய அருள்மிகு சிவசுப்பிரமணியப்பெருமான் திருக்கோயிலில்  23 – 06 – 2026ஆம் நாள் இனிதே நடைபெற்றது.

    Read More அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும் 2023Continue

  • நாவலர்பெருமான் குருபூசை -2023
    2023 | சமயப்பணி | ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

    நாவலர்பெருமான் குருபூசை -2023

    Byilankaisaivism 2026-05-202026-05-28

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் இலங்கை சைவநெறிக் கழகம்,ஈழத்து திருநெறித் தமிழ் மன்றம், இந்து வித்தியா விருத்தி சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம்,  இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து  நாவலர்பெருமான் குருபூசை 04 – 12 – 2023ஆம் நாள் கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. பாடசாலை மாணவர், சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர் முதலியோரின் பங்களிப்புடன் இக்குருபூசை இனிதே நடைபெற்றது. இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப்…

    Read More நாவலர்பெருமான் குருபூசை -2023Continue

  • மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் சொற்பொழிவு 2023
    2023 | கழகத் தலைவர் சொற்பொழிவுகள் | சமயப்பணி | சைவச்சொற்பொழிவுகள் | மாத்தளை

    மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் சொற்பொழிவு 2023

    Byilankaisaivism 2026-05-202026-05-20

    மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் திருவிழாக் காலத்தில் 26-02- 2023 ஆம் நாள்  இலங்கைச் சைவநெறிக்  கழகத் தலைவர்  சிவத்திரு.மரு. ஈசானதேசிகர் கி.பிரதாபன் அவர்கள் சைவத்திரு.புண்ணியசீலன் ஐயா அவர்களின் விண்ணப்பத்தில் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தத் திருவருள் கூடியது.  மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் திருவிழாக் காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுக்கு நேரம் ஒதுக்கி, சைவமக்கள் சொற்பொழிவுகளால் ஆற்றுப்படுத்தும் பெருஞ்சிவதொண்டினைப் பல்லாண்டுகளாகச் சைவத்திரு.புண்ணியசீலன் ஐயா அவர்களின் மேற்பார்வையில் நடத்திவருகின்றனர்.      

    Read More மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் சொற்பொழிவு 2023Continue

  • திருமந்திர ஆன்மீக மாநாடு 2023
    2023 | கழகத் தலைவர் சொற்பொழிவுகள் | சமயப்பணி | சைவசமய மாநாடு

    திருமந்திர ஆன்மீக மாநாடு 2023

    Byilankaisaivism 2026-05-142026-05-20

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறையினரும் அகில இலங்கை சைவ மகாசபையினரும் இணைந்து திருமந்திர ஆன்மீக மாநாடு 2023 என்னும் தலைப்பில், 28 -10- 2023ஆம் நாளன்று திருமந்திர மாநாடு மிகச்சிறப்பாக நடத்தியிருந்தனர். இம்மாநாட்டில் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் பதில் தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையின் அதிபர் சைவத்திருமதி சிவசோபனா வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்,  கழகத் தலைவரின் சிற்றுரையும் இடம்…

    Read More திருமந்திர ஆன்மீக மாநாடு 2023Continue

  • களுத்துறை மண்ணில் நவராத்திரி விழா விவாத அரங்கு 2023
    2023 | கழகத் தலைவர் சொற்பொழிவுகள் | சமயப்பணி | தென்னிலங்கை

    களுத்துறை மண்ணில் நவராத்திரி விழா விவாத அரங்கு 2023

    Byilankaisaivism 2026-05-132026-05-13

    களுத்துறை அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குரிய நவராத்திரி விழாவுக்குரிய விவாத நிகழ்ச்சிக்குரிய பயிற்சி இலங்கைச் சைவநெறிக் கழகத்தினால் வழங்கப்பட்டதுடன்,  இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபன் அவர்களால் 20  – 10 – 2023ஆம் நடைபெற்ற குறித்த விவாத நிகழ்ச்சி நடுவர் பொறுப்பில் இருந்து நெறிப்படுத்தப்பட்டது. திருக்கோயில் நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் கலைநிகழ்ச்சிக்கு , இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சைவத்திரு.ய.அநிருத்தனன் அவர்கள் முதன்மை விருந்தினராகவும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின்…

    Read More களுத்துறை மண்ணில் நவராத்திரி விழா விவாத அரங்கு 2023Continue

  • நாவலர் விழா 2022
    2022 | சமயப்பணி | ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

    நாவலர் விழா 2022

    Byilankaisaivism 2026-05-132026-05-13

    நாவலர்பெருமானின் 200ஆவது ஆண்டு உதித்த நன்னாளினைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தால் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விண்ணப்பத்திற்கு ஏற்ப, நாவலர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுப் பல்வேறு நிகழ்ச்சிகள் நாவலர்பெருமானைச் சிறப்பிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் அங்கமாக, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் ஏற்பாட்டில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, இலங்கைச் சைவநெறிக் கழகம் அடங்கலாகப் பல்வேறு சைவ அமைப்புக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, நாவலர்பெருமான் குருபூசையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த…

    Read More நாவலர் விழா 2022Continue

  • 2022 | சமயப்பணி | சைவ நூல்கள்

    சைவம் பேணுவாம் 2022-சிவகீதை நூல் அறிமுகவிழாவும் சிவநெறி அரங்கும்

    Byilankaisaivism 2026-05-122026-06-02

    தமிழ்நாட்டில் சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சிவகீதை நூலினை இலங்கையில் அறிமுகம் செய்துவைக்கும் விழாவாகவும், சைவ விழிப்புணர்ச்சிச் சொற்பொழிவுகள் அடங்கிய சிவநெறி அரங்கு விழாவாகவும் சைவம் பேணுவோம் விழா, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 20 – 12 – 2022ஆம் நாளன்று இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டது.  சைவசமயத்திலும் கீதை என்னும் நூல் உண்டு என்பது குறித்த விழிப்புணர்வையும், ஏராளமான கீதைகள் உள்ளன என்பதனையும் சைவத்தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும் என்பதன்பொருட்டுத்…

    Read More சைவம் பேணுவாம் 2022-சிவகீதை நூல் அறிமுகவிழாவும் சிவநெறி அரங்கும்Continue

  • சிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்பு
    2015 | சமயப்பணி | சிவராத்திரி | நிதியுதவி

    சிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்பு

    Byilankaisaivism 2025-07-012026-03-21

    சிவராத்திரிப் பெருநாளில் உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையினால் நடத்தப்படும் நந்திக்கொடி நிதிசேகரிப்புக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றியது.  நந்திக்கொடிச் சின்னம் வழங்கி உண்டியல்களில் நிதிசேகரித்து அந்த நிதியைக் கொண்டு உலக சைவப் பேரவை இலங்கைக் கிளை இலங்கை முழுதும் பல்வேறு சைவப்பணிகளை முன்னெடுத்துவரும் அமைப்பாகும்.  எனவே, இப்பெருஞ் சிவப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் உதவக்கூடியதாக அமைந்தது பெரும்பேறாகும்.

    Read More சிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்புContinue

  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021
    2021 | சமயப்பணி | வாழ்வியல்

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021

    Byilankaisaivism 2025-05-222026-03-21

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 – 11 –  2021ஆம் நாளன்று  மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக் கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது.

    Read More ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021Continue

  • செவ்வண்ணன் அடிசேர்ந்த சேக்கிழார் அடிப்பொடியார்
    2021 | சமயப்பணி | சைவப்பெரியார்

    செவ்வண்ணன் அடிசேர்ந்த சேக்கிழார் அடிப்பொடியார்

    Byilankaisaivism 2025-05-222026-03-21

    தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பெரும் பணிகள் பல ஆற்றிய சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரனார் அவர்கள் கடந்த 2021இல் தன் சிவபதம் அடைந்தார். சைவசித்தாந்தம், பாரதியார் பற்றி பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ள அன்னார், பெரியபுராணம் மீது கொண்ட ஈடுபாட்டால் தனக்கு “சேக்கிழார் அடிப்பொடி” எனும் புனைபெயரைச் சூடிக்கொண்டவர். அவருடைய சிவபதப்பேறுக்கு திருவருளை விண்ணப்பித்தும், அவர் வையக வாழ்வை நீத்தமையினால் பிரிவுத்துயரில் விளங்கும் அவருடைய உறவினர் மாணாக்கர் சைவாபிமானியர் யாவருடனும் அன்புபாராட்டும் வகையிலும் இலங்கை சைவநெறிக் கழகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்…

    Read More செவ்வண்ணன் அடிசேர்ந்த சேக்கிழார் அடிப்பொடியார்Continue

Page navigation

Previous PagePrevious 1 2 3 4 … 13 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search