Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014
    2014 | கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் | சமயப்பணி | சமூகப்பணி

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014

    Byilankaisaivism 2025-04-102025-04-10

    அருள்மிகு கற்பகவிநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர்பால் பத்தியுடைய அன்பர்களால்,  கதிர்காமத் திருவிழாவின்போது, கதிர்காம மலையேறும் பத்தர்களுக்கு தாகம் தீர்த்தும் முகமாகத், தண்ணீர்ப் பந்தல் அமைத்து, தண்ணீர் குளிர்பானம் என்பன வழங்கப்பட்டு வருதல் ஆண்டுதோறும் வழக்காகவிருந்தது. இத்தொண்டர் அணி உறுப்பினர் யாவரும் சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் தோற்றத்தில் பங்குகொண்டமையினால், அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியின் பணியில் சைவ சமூகத் திருப்பணிக் கழகமும் (இலங்கை சைவநெறிக்…

    Read More கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2014Continue

  • சிவராத்திரிப் பெருநாளில் சைவத் துண்டுப்பிரசுரப் பணி 2014
    2014 | சமயப்பணி | துண்டுப்பிரசுரம்

    சிவராத்திரிப் பெருநாளில் சைவத் துண்டுப்பிரசுரப் பணி 2014

    Byilankaisaivism 2025-04-092025-05-20

    கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுர விநியோகம் கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத் திருக்கோயிலில் 27 – 02 – 2014ஆம் நாள் சிவராத்திரிப் பெருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் விநியோகிக்கப்பட்டது.

    Read More சிவராத்திரிப் பெருநாளில் சைவத் துண்டுப்பிரசுரப் பணி 2014Continue

  • மாணவர்களுக்குரிய சைவசமயப் பாடநூல்கள்
    சைவ நூல்கள்

    மாணவர்களுக்குரிய சைவசமயப் பாடநூல்கள்

    Byilankaisaivism 2024-07-312024-08-01

    1)சைவசமய சாரம் – சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் அவர்கள் எழுதியது. மிகவும் எளிமையாகச் சைவசமய அடிப்படைகளைச் சிந்தாந்த நுட்பங்களையும் அனைவரும் விளங்கிக்கொள்ளுமாறு எழுதப்பட்டுள்ள சிறப்புடைய நூலாகும். சைவசமயத்தார் அனைவரும் படிப்பதற்கு ஏற்றவகையில் இந்நூல் விளங்குகின்றது.திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபையினரால் முதன்முதலில் 1947ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலாகும். 1A) திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபையினரால் பதிப்பிக்கப்பட்ட 1956ஆம் ஆண்டுப் பதிப்பு நூல் DOWNLOAD LINK1A DOWNLOAD LINK1B DOWNLOAD LINK2A DOWNLOAD LINK2B DOWNLOAD LINK3A DOWNLOAD LINK3B 1B)…

    Read More மாணவர்களுக்குரிய சைவசமயப் பாடநூல்கள்Continue

  • மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்
    Uncategorized | சைவ நூல்கள்

    மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

    Byilankaisaivism 2024-07-212026-04-25

    மெய்கண்ட சாத்திரம் முழுவதுமான நூல் பதிப்புக்கள் 1) மெய்கண்ட சாத்திரம் – மூலமும் உரையும் – உரையாசிரியர் முனைவர் அ.அறிவொளி – வர்த்தமானன் பதிப்பகம்- 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 600 017( வடக்கு உஸ்மான் சாலை விவேக்ஸ் அருகில், KENCES TOWERS பக்கத்தில் தொடர்ப்பிலக்கம் – 28140347/28144995/43502995/ +919094963125/+919941863542/+919380630192 ; இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம்.2) மெய்கண்ட சாத்திரங்கள் – உரையாசிரியர் சித்தாந்தச் செம்மணி – முனைவர் பழ.முத்தப்பன்– உமா பதிப்பகம் – 18/171, பவளக்…

    Read More மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்Continue

  • சிவஞானமாபாடியம் – வருணத்துவப் பகுதிகள் இடைச்சேர்க்கைகளே!
    கட்டுரை | சைவ முரசு | சைவசமயம் கட்டுரைகள்

    சிவஞானமாபாடியம் – வருணத்துவப் பகுதிகள் இடைச்சேர்க்கைகளே!

    Byilankaisaivism 2024-07-042026-03-21

    சிவத்திரு பரணீதரனார் அவர்கள், சிவஞானமாபாடிய கர்த்தராகிய மாதவச்சிவஞானமுனிவர் வருணத்துவம் நீக்காதென்ற கொள்கை உடையவர் என்று சாதித்த சில சாதிவாதச் சைவருக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், தற்காலத்தில் வழக்கில் உள்ள சிவஞானமாபாடியம் குறித்த விளக்கங்களை முகநூலில் 02 – 07 – 2024 ஆம் நாள் எழுதியுள்ளார்.  தற்கால சிவஞானமாபடியப் பதிப்பில் காணப்படும் வருணத்துவம் குறித்த பகுதிகள் இடைச்சேர்க்கையாக உள்ளது குறித்து அருணைவடிவேல் முதலியார் பெருமான் முதலியோர் எடுத்துக்காட்டி விளக்கியவற்றைக் குறிப்பிட்டு, சிவஞானமாபாடியம் அச்சேற்றப்பட்ட வரலாற்றை விளக்கி எழுதியுள்ளார்….

    Read More சிவஞானமாபாடியம் – வருணத்துவப் பகுதிகள் இடைச்சேர்க்கைகளே!Continue

  • சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் 2019
    2019 | சமயப்பணி | துண்டுப்பிரசுரம்

    சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் 2019

    Byilankaisaivism 2024-06-292025-05-20

    2019ஆம் ஆண்டுச் சிவராத்திரித் திருநாளில் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் திரு.அ.கஜந்தன் அவர்களின் தலைமையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    Read More சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் 2019Continue

  • தென்றல் சஞ்சிகையில் அலகிலா ஆடல்-சைவத்தின் கதை
    2019

    தென்றல் சஞ்சிகையில் அலகிலா ஆடல்-சைவத்தின் கதை

    Byilankaisaivism 2024-06-292024-06-29

    சித்திரை- ஆனி 2019 தென்றல் சஞ்சிகையில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட, இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளரால் எழுதப்பட்ட ”அலகிலா ஆடல்-சைவத்தின் கதை” நூல் அறிமுகம் வெளியிடப்பட்டிருந்தது. அலகிலா ஆடல் சைவத்தின் கதை நூலினையும் சிவப்பிரகாசக் கதவம் நூலினையும் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளமுடியும்.

    Read More தென்றல் சஞ்சிகையில் அலகிலா ஆடல்-சைவத்தின் கதைContinue

  • பத்திரிக்கைகளில் யாழ்ப்பாண இருநூல் வெளியீட்டு விழா
    2019

    பத்திரிக்கைகளில் யாழ்ப்பாண இருநூல் வெளியீட்டு விழா

    Byilankaisaivism 2024-06-292024-06-29

    யாழ்ப்பாணம் இணுவிலில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் நடத்தப்பட்ட இருநூல் வெளியீட்டு விழா குறித்த செய்தி விழா நாளில் (21-09- 2019) வலம்புரி நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், வீரகேசரிப் பத்திரிக்கையில்(13-10-2019) விழா நிழற்படங்கள் தகவல்களோடு வெளியாகியிருந்தது. சிவபூமி சஞ்சிகையிலும் விழா நிகழ்ச்சி குறித்த செய்தி ஆவணமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

    Read More பத்திரிக்கைகளில் யாழ்ப்பாண இருநூல் வெளியீட்டு விழாContinue

  • பத்திரிக்கைகளில் சைவம் போற்றுதும் 2018
    2018

    பத்திரிக்கைகளில் சைவம் போற்றுதும் 2018

    Byilankaisaivism 2024-06-29

    ஞாயிறு வீரகேசரிப் பத்திரிக்கை இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்ட ”சைவம் போற்றுதும்” நிகழ்ச்சி குறித்த செய்தியை மிகவும் சிறப்பாக வெளியிட்டிருந்தனர். ஞாயிறு வீரகேசரி முதன்மை ஆசிரியர் திரு.பிரபாகன் அவர்கள் மக்களிடம் இவ்விழா குறித்த செய்தி சென்றடையவேண்டும் என்று கொண்டிருந்த கரிசனையின் வெளிப்பாட்டை சைவம் போற்றுதும் குறித்த செய்தியினை வெளியிட்டு வைத்துள்ள விதம் உணர்த்தியுள்ளது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் நன்றி அப்பெருமகனாருக்கு என்றும் உரித்தாகுக. சைவம் போற்றுதும் விழாவில் இடம்பெற்ற ஒருசில நிகழ்ச்சிகளை வீரகேசரி நிருபர் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

    Read More பத்திரிக்கைகளில் சைவம் போற்றுதும் 2018Continue

  • நாவலர் காலமாற்றத்தை உள்வாங்காதவரா? கம்பவாரிதியாரின் கட்டுரைக்கு மறுப்பு
    2017 | சமயப்பணி | சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகனார் கட்டுரைகள் | சைவசமய இடர்களைவுப் பணி

    நாவலர் காலமாற்றத்தை உள்வாங்காதவரா? கம்பவாரிதியாரின் கட்டுரைக்கு மறுப்பு

    Byilankaisaivism 2024-06-29

    வீரகேசரியில் இடைக்கண் முறிந்தார் பலர் என்னும் தலைப்பில் கம்பவாரிதியவர்களின் கேரள டயரிகுறித்த விமர்சனக்கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில் நாவலர் பெருமான் காலமாற்றத்தை உள்வாங்கவில்லை என்று குறைபட்டிருந்ததோடு, நாவலர்பெருமான் சாதிப்பாகுபாட்டினைத் திணித்தார் என்பதுபோல் பொருள்கொள்ளுமாறு தம்கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தார். இதற்குரிய மறுப்பினை கழகத் தலைவர் சைவத்திரு.மரு.கி.பிரதாபன் அவர்கள் எழுதி வீரகேசரிப் பத்திரிக்கைக்கு வழங்கினார். வீரகேசரிப் பத்திரிக்கை நிர்வாகமும் மறுப்புக்கட்டுரையின் அவசியத்தை உணர்ந்து தமது 05-11-2007 ஞாயிறு பதிப்பில் வெளியிட்டு உதவினர்.   சைவவினாவிடை என்பது எந்தவொரு விளக்கவுரைகளும் வழங்காது கேள்வி விடையாக…

    Read More நாவலர் காலமாற்றத்தை உள்வாங்காதவரா? கம்பவாரிதியாரின் கட்டுரைக்கு மறுப்புContinue

Page navigation

Previous PagePrevious 1 2 3 4 5 … 12 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search