பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டுத் துண்டுப்பிரசுரப்பணி 2021
கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப்பெருநாளை முன்னிட்டு (11- 03-2021) சைவசமயத் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.
கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப்பெருநாளை முன்னிட்டு (11- 03-2021) சைவசமயத் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.
கொழும்பு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் திருக்கோயிலில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் சிவராத்திரிப்பெருநாளை (21-02-2020) முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்டது.
கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத் திருக்கோயிலுக்கு ஒருதொகைத் துண்டுப்பிரசுரம் கையளித்தல் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) உறுப்பினர் மருத்துவர் ஆசைப்பிள்ளை சயூரதன் அவர்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சுவரத்தில் திருக்கோயிலுக்கு வரும் அடியாருக்குக் கையளிப்பதற்காகக் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் 21-10-2014ஆம் திகதியன்று ஒருதொகைத் துண்டுப்பிரசுரங்களைக் கோயிற் தொண்டரிடம் வழங்கி வைத்தார்.
ஊர்க்காவற்றுறையில் விளங்கும் சைவப்பெயர்களுடனான வீதிகளுக்கு கிருத்தவப் பெயர்கள் வைக்கும் செயன்முறையொன்று ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபையைப் பயன்படுத்திக் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் மேற்கொண்ட செயலானது, இலங்கை சைவநெறிக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனே, பல்வேறு சைவ அமைப்புக்களுடனும் தொடர்புகொண்டு கண்டனக் கடிதங்களை ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ததோடு, இலங்கை சைவநெறிக் கழகமும் வீதிகளுக்கு சைவப்பெயர்களை அழித்து கிருத்தவப் பெயர்களைப் புகுத்தும் செயல் இலங்கையில் தமிழரிடையே ஒற்றுமையைக் குலைக்கும் என்பதனை விளக்கி, இச்செயலைக் கைவிடுமாறு ஊர்காவற்றுறைப் பிரதேச…
தமிழ்நாடு சைவசித்தாந்தப் பெருமன்றம் பல்வேறு அமைப்புக்களினையும் இணைத்து ஏற்பாடு செய்த மார்கழிப் பெருவிழா பெரியபுராண பன்னாட்டுக் கருத்தரங்கில் இலங்கை சைவநெறிக் கழகமும் கலந்துகொண்டதுடன், ”நாவலர் வழி பெரியபுராணமும் சைவ மதிப்பீடுகளும்” என்னும் தலைப்பில் (2021-01-02), கழகத் தலைவர் மருத்துவர் ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தியிருந்தார்.
அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், இலங்கை சைவநெறிக் கழகம் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 15-07-2019,16 -07- 2018ஆம் திகதிகளில் இரு நாள்களுக்கு நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது.
மாத்தறை மாவட்டத்தில் தெனியாயப் பகுதியில் 27- 10 – 2018ஆம் நாள் சைவ முன்னேற்ற மாநாடு வெகுசிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் இலங்கை சைவநெறிக் கழகத்தாரும் கலந்து சிறப்பித்தனர். தெனியாய சைவ முன்னேற்றக் கழகமானது இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களின் வழிகாட்டுதலில் தெனியாயவில் தொடங்கப்பட்டுள்ள சைவசமய அமைப்பாகும். தெனியாயப் பிரதேசமானது கொட்டப்பொல பிரதேச செயலகப் பிரிவுக்குள் அமைந்துள்ள முதன்மை நகரமாகும். கொட்டப்பொல பிரதேச செயலகப் பிரிவில்…
டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழையானது, 22ஆம் திகதி முதல் கொடும் மழையாகப் பெய்யத்தொடங்கியதனால் இலங்கையின் வடபகுதி பெரும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகி, பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து பல இடங்களில் தஞ்சமடைய வேண்டிய இடர் ஏற்பட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார், வவுனியா,முல்லைத்தீவு ஆகிய தமிழ்ப் பகுதிகளே இவ்வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகிய இடங்களாகும். இவ்வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட இடர்காலத்தில், அகில இலங்கை இந்து மாமன்றம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, வடபகுதியில் நேரடியாகப்…
சிவராத்திரித் திருநாளில் (13-02-2018) சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் அடியாரிடத்தே விநியோகிக்கப்பட்டது.
அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், இலங்கை சைவநெறிக் கழகம் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 31 -07- 2018ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது.