கொழும்பு விவேகானந்த சபையிற் கழகத் தலைவரின் சொற்பொழிவு
கொழும்பு விவேகானந்த சபையில் சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளின்பொருட்டு (27-01-2019) ஏற்பாடு செய்யப்பட்ட விவேகானந்தர் விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். “ஞானத்தினை நோக்கி நகர்ந்த சுவாமி விவேகானந்தர் கண்ட சைவசித்தாந்த தரிசனம்” என்னும் தலைப்பிற் கழகத்தின் தலைவர் அவர்கள் சொற்பொழிவாற்றினார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றிச் சாதித்ததற்குக் காரணம், அமெரிக்காவினர் ஆபிரகாமிய மதங்களைத் தவிர வேறொன்றினையும் அறிந்திராமையேயாகும். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காச் சொற்பொழிவுகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியபோது, முதலில் வந்தது இலங்கைக்கேயாகும்….
